இஸ்லாமிய மக்கள் நடத்தும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய இயக்கங்களின் 33 வங்கி கணக்குகள் முடக்கம்
இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய ரிஹாப் இந்தியா அறக்கட்டளைக்கு எதிரான பண மோசடி வழக்கு விசாரணையின் பகுதியாக, பாப்புலர் ஃப்ண்ட் ஆஃப் இந்தியா, ரிஹாப் இந்தியா அறக்கட்டளையின் 33 வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை இயக்குநரகம் முடக்கியுள்ளது. இந்த வங்கி கணக்குகளில் ரூ.68 லட்சட்துக்கு மேல் பணம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேகத்திற்குரிய வகையில் பணமோசடி நடவடிக்கைகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் ஒரு பகுதியாக 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாகக் கூறி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கொச்சியிலுள்ள அமலாகத்துறை அலுவலகத்திற்கு அணிவகுத்துச் சென்றனர். 59 லட்சத்து 12 ஆயிரத்து 51 ரூபாய் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் 23 கணக்குகளும், 9 லட்சத்து 50 ஆயிரத்து 30 ரூபாய் கொண்ட ரிஹாப் இந்தியா அறக்கட்டளையின் 10 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பு 2006 ஆம் ஆண்டு கேரளாவில் தொடங்கப்பட்டது. தற்போது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக அமலாக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பண மோசடி வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்