சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில், முக கவசம் அணிவது கட்டாயமாகும்
சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் நிர்வாக நீதிபதி பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வு வழக்குகளை விசாரித்த போது நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கையாக, ஜுன் மாதம் 20 ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள், அலுவலர்கள் முகக் கவசம் அணிந்து வர வேண்டும்.
அணியாவிடில் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டாம். வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லாதவர்களை அனுமதிப்பதைத் தவிர்க்க வேண்டுமென மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது...
கருத்துகள்