முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அக்னிபத் திட்டம்: அரசின் முன்னெடுப்பும், பல மாநிலங்களில் எதிராக போராட்டமும்

அக்னிபத் திட்டம்: நுழைவு வயது நீட்டிப்பு

அக்னிபத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து, ஆயுதப் படைகளில் புதிதாகப் பணியமர்த்தப்படுவோருக்கான நுழைவு வயது 17 ½ - 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பணியமர்த்தலை மேற்கொள்ள இயலாத காரணத்தால், 2022-ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள பணியமர்த்தல் சுழற்சிக்கு ஒருமுறை விலக்கு அளிக்கப்படும் என்று அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, 2022-ஆம் ஆண்டிற்கான அக்னிபத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தல் நடைமுறைக்கான அதிகபட்ச வயது வரம்பு 23-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்தில் வயது தளர்வு அறிவித்திருப்பது இளைஞர்கள் மீது அரசுக்கு உள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது: மத்திய அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங்

இளைஞர்கள் ஆயுதப்படையில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவை செய்ய அக்னிபத் திட்டம் பொன்னான வாய்ப்பை அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இரண்டுநாள் பயணமாக ஜம்மு&காஷ்மீர் சென்றுள்ள அவர், கடந்த இரண்டு ஆண்டுகள், கொரோனா காரணமாக ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெறாததால், இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். இளைஞர்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, பிரதமர் திரு.நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, 2022-ம் ஆண்டில் அக்னிபத் திட்டத்தின்கீழ், ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை 21-லிருந்து 23-ஆக உயர்த்தி அரசு அறிவித்துள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

'அரசின் வயது தளர்வு அறிவிப்பு இளைஞர்கள் நலன் மீதான அரசாங்கத்தின் அக்கறையை காட்டுகிறது என்றும், ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை ராணுவ விவகாரங்களுக்கான அமைச்சகம், ராணுவ மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் தொடங்கும். இளைஞர்கள் அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்” என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்தார்.

பின்னர் அவர், பஹல்காமிலுள்ள ஜவஹர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மவுன்டெய்னரிங் மற்றும் விண்டர் ஸ்போர்ட்சின் 9-வது நிர்வாகக்குழு மற்றும் 4-வது பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங், மலையேறுதல் மற்றும் குளிர்கால விளையாட்டுகளுக்குப் பயிற்சி அளிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஜவஹர் நிறுவனம் உள்ளதாக தெரிவித்தார். மலையேறுதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்கள் உடல் சகிப்புத் தன்மையை அதிகரிப்பதுடன், மனஉறுதியையும், உற்சாகத்தையும் தருவதாக குறிப்பிட்டார்.

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த துறைகளில் தற்போது பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவது அதிகரித்து வருவதற்கு, அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேருவதற்கான நுழைவு வயதை 21-லிருந்து 23-ஆக உயர்த்தி பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்திருப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவேற்பு

அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேருவதற்கான நுழைவு வயதில், இரண்டு ஆண்டுகள் தளர்வு அளித்து, 21-லிருந்து 23-ஆக உயர்த்தி பிரதமர் திரு.நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.அமித்ஷா நன்றியும், வரவேற்பும் தெரிவித்துள்ளார்.

அமித்ஷா தனது ட்விட்டர் செய்தியில், “கொவிட் பெருந்தொற்று அச்சம் காரணமாக, கடந்த 2 வருடங்களாக ராணுவத்தில் ஆட்சேர்க்கும் பணிகள் நடத்தப்படவில்லை. இதனால் ராணுவப் பணியில் சேர இயலாமல்போன இளைஞர்களுக்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி, அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேருவதற்கான நுழைவு வயதை 21-லிருந்து 23-ஆக உயர்த்தி அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பால் ஏராளமான இளைஞர்கள் பயன் பெறுவதுடன், நாட்டுக்கும் சேவையாற்ற முடியும் என்றும், ஒளிமயமான எதிர்காலத்துக்கு செல்வார்கள். இதற்காக பிரதமர் திரு.நரேந்திர மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்அக்னி வீரர்களுக்கு உதவும் வகையில் பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் & நிதி நிறுவனங்கள் உடன் நிதிச் சேவைகள் துறை ஆலோசனை

கடன் வசதிகள், அரசு திட்டங்கள் மற்றும் காப்பீட்டு தொகுப்பு ஆகியவை மூலம் அக்னி வீரர்களுக்கு பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் & நிதி நிறுவனங்கள் உதவ உள்ளன

மத்திய அமைச்சரவை 2022 ஜூன் 14 ஆம் தேதி ஆயுதப் படைகளில் இணைவதற்கான ’அக்னிபத்’ என்ற திட்டத்தை அறிவித்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அக்னிபத் திட்டம் இளைஞர்கள் தேசப்பற்றுடன் ஆயுதபடைகளில் இணைந்து 4 ஆண்டுகள் இணைந்து சேவையாற்ற வழிவகை செய்கிறது. ஆயுதப் படைகளில் இளைஞர்கள் இணைந்து பணியாற்றும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அக்னி வீரர்கள் தங்களது பணிக்காலத்தை நிறைவு செய்த பிறகு அவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் நன்மை தரும் திட்டங்கள் குறித்து பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் & நிதி நிறுவனங்கள் தலைமைச் செயல் அதிகாரிகள் உடன் நிதிச் சேவைகள் துறை செயலர் இன்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் ராணுவ விவகாரங்கள் துறை இணை செயலர் அக்னிபத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

அக்னி வீரர்களின் கல்வி மற்றும் திறனுக்கு ஏற்ப அவர்களுக்கு சலுகைகள் / தளர்வுகள் ஆகியவற்றின் மூலம் பொருத்தமான வேலை வாய்ப்புகளை வழங்க பொதுத்துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் & நிதி நிறுவனங்கள் ஆராய வேண்டுமென இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

 மேலும், அக்னி வீரர்களுக்கு திறனை மேம்படுத்த கடன் வசதிகள், வணிகம் மேற்கொள்வதற்கும், சுய தொழில் அமைப்பதற்குமான கல்வி ஆகியவற்றீன் மூலம் அவர்களுக்கு உதவுவதற்கான சாத்தியக் கூறுகளை வங்கிகள் ஆராய வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. முத்ரா, ஸ்டாண்ட் அப் இந்தியா ஆகிய அரசு திட்டங்கள் மூலமும் அக்னி வீரர்களுக்கு ஆதரவு அளிக்கப்படும்.என தெரிவிக்கப்பட்ட நிலையில்   இந்தத் திட்டம் குறித்து மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இந்திய ராணுவத்தின் தரைப் படை, கடற் படை, வான் படைக்கு வீரர்களைத் தேர்வு செய்வதற்காக, "அக்னி பாதை" என்ற புதிய திட்டத்திற்கு, ஒன்றிய பாஜக அரசின் அமைச்சரவை, ஜூன் 14ம் தேதி ஒப்புதல் அளித்து உள்ளது.இதன்படி, 17.5 வயது முதல் 21 வயது உடைய இருபாலரும் முப்படைகளில் சேரலாம்; தற்போதைய கல்வித் தகுதி, உடற் தகுதி நடைமுறைகள் அப்படியே பின்பற்றப்படும்; புதிய திட்டத்தில் பணியில் சேருவோர் "அக்னி வீரர்கள்" என அழைக்கப்படுவர்; இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் ராணுவத்தில் சேவையாற்ற வேண்டும்; அதன்பிறகு, ரூ.11 லட்சம் முதல் 12 லட்சம் வரை நிதி உதவியுடன் வெளியேற்றப்படுவார்கள்.25 விழுக்காட்டினர் மட்டுமே, இந்தியப் படையில் நிரந்தரப் பணி வாய்ப்பு பெறுவார்கள்; 75 விழுக்காட்டினர் வெளியேற்றப்பட்டு விடுவார்கள். இதுதான், அக்னி பாதைத் திட்டம். இந்தப் புதிய ஆள்சேர்ப்புக் கொள்கையின் முதன்மை நோக்கமே, இந்தியப் படையில் பெருகி வருகின்ற ஓய்வு ஊதியச் செலவுகளைத் தடுப்பதுதான் என்று, ராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர்.இது, நியாயம் அற்ற தேர்வு முறை. இந்தியப் படையில் ஒதுக்கீடு பெற்று இருக்கின்ற பல்வேறு பிரிவினரைக் கடுமையாகப் பாதிக்கும் என முன்னாள் ராணுவத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.எனவே இந்தத் திட்டத்திற்கு எதிராக, பிகார், அரியானா, ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இளைஞர்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் இறங்கி உள்ளனர். பிகாரில் ரயிலுக்குத் தீ வைத்துள்ளனர். நாட்டில், வேலையின்மை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்தியப் படையில் சேர்ந்து பணியாற்ற விரும்புகின்றனர். இந்த நிலையில், தொழில் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை அமர்த்தி, பிறகு தூக்கி எறியும் நடைமுறை போன்று, ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை இந்தியப் படையில் சேர்த்துவிட்டு, தொடர்ந்து பணியாற்ற வாய்ப்பு அளிக்காமல், 4 ஆண்டுகளில் தூக்கி வீசுகின்ற நடைமுறை, ராணுவத்தின் மதிப்பையும், மரியாதையையும் குறைத்து விடும்.மேலும் மத்திய பாஜக அரசின் இன்னொரு உள்நோக்கம் இதில் ஒளிந்து இருக்கின்றது. "இந்திய ராணுவத்தைக் காவி மயம் ஆக்க வேண்டும் என்கின்ற, ஆர்எஸ்எஸ் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான மறைமுகத் திட்டமே "அக்னி பாதை" என்ற ஐயம் ஏற்பட்டு இருக்கின்றது.


அதாவது, 21 வயதில் வெளியேற்றப்படுகின்ற அந்த இளைஞர்களுக்கு, 12 ஆம் வகுப்பு தேர்வுச் சான்று இதழ் தரப்படும் என்கிறார்கள். ஆனால், அதே காலகட்டத்தில், கல்லூரிகளில் பயில்கின்ற இளைஞர்கள், 20 வயதில் பட்டப் படிப்பை முடித்து, 21 வயதில் ஓராண்டு உயர்கல்வியும் முடித்து இருப்பார்கள்.4 ஆண்டுகள் படைப் பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு, அதன்பிறகு உயர்கல்வி என்பது எட்டாக் கனியாக ஆகி விடும். இதுதான் உள்நோக்கம். இந்தத் திட்டத்தால், இந்திய இளைஞர்களின் ஒட்டுமொத்தமான எதிர்ப்புக்கு உள்ளாக நேரிடும் என்பதை ஒன்றிய பாஜக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். அக்னி பாதை திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றேன்." என்று வைகோ கூறியுள்ளார்.அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக இன்றும் போராட்டம் நீடிக்கிறது. பீஹார் மற்றும் உத்திரப் பிரதேசத்தில் இரயில் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டது இந்தத் திட்டத்திற்கு சில மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. அக்னி வீரர்களாக தேர்வு செய்யப்படுவோரில் 75 சதவீதம் பேருக்கு பணிபாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய பலன்கள் இல்லை என்பதால், இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்திட்டத்தால், முப்படைகளிலுள்ள சீக்கியர் ஜாட் போன்ற படைப்பிரிவுகளில் மாற்றமேற்படுமெனக் கூறியும்  பீஹாரில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. ரயில் பெட்டிக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் ரயில்கள் மீது கல்வீசப்பட்டன. ரயில் நிலைய சொத்துகள் சூறையாடப்பட்டன.உத்திரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களிலும் போராட்டம் இன்றும் நீடித்தது. பீஹாரில் துணை முதல்வர் ரேணு தேவிக்கு சொந்தமாக மேற்கு சாம்பிரான் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவை வைத்து. மாநிலம் முழுவதும் பல இடங்களில் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்தும், சாலைகளை மறித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெகுசாராய் மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்திற்குள் புகுந்த மாணவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். கற்களை வீசியும், ரயில்வே சொத்துகளை அடித்து நொறுக்கியும் ரகளை செய்தனர். சமஸ்திபூர் மாவட்டத்தில் இரண்டு ரயில் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டது. அதில், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. லக்கிசராய் மாவட்டத்தில் பா.ஜ., அலுவலகம் மீது தாக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் பல்லியா பகுதியிலுள்ள ரயில் நிலையத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த சொத்துகளை சேதப்படுத்தியதுடன், ரயில் பெட்டிக்கும் தீவைத்தனர். இதனையடுத்து, காவல்துறை அவர்களை தடியடி நடத்தி விரட்டினர். இதனையடுத்து, அதனுடன் இணைக்கப்பட்டிருந்த மற்ற பெட்டிகளை தனியாக பிரித்து பாதுகாக்கும் பணியில் காவல்துறை மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.உத்திரப் பிரதேச., மேற்கு மாவட்டத்திலுள்ள ரயில் நிலையத்தில் கம்புகளுடன் வந்த போராட்டக்காரர்கள் காவலர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த கடைகள் மற்றும் சொத்துகளை அடித்து நொறுக்கினர்.

தெலுங்கானாவின் செகந்திராபாத் ரயில் நிலையத்துக்குள் நுழைந்த இளைஞர்கள் அங்கிருந்த பொருட்களை சூறையாடி, தீயிட்டுக் கொளுத்தி ரயில்வே தண்டவாளங்களில் வீசினர். இதனால் பயணிகள் அலறியடித்து தப்பி ஓடினர். ரயில் நிலைய கடைகளைச் சூறையாடிய இளைஞர்கள், எங்களுக்கு நீதி வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வன்முறையை கட்டுப்படுத்தும் விதமாக போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார், பத்து பேர் காயமடைந்தனர். மேலும், செகந்திராபாத் ரயில் நிலையம் ரூ.20 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டிருப்பதாகவும்., மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானாவிலும் போராட்டம் வெடித்துள்ளது. ஹரியானாவின் பல்வல் மாவட்டத்தில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து இணைய சேவை மற்றும் குறுஞ்செய்தி சேவை துண்டிக்கப்பட்டுள்ளதுஅக்னிபத் திட்டத்திற்கு எதிராக ரயில் தண்டவாளங்களில் மாணவர்கள், இளைஞர்கள் அமர்ந்துள்ளனர். மேலும் சில இடங்களில் தடையை ஏற்படுத்தி உள்ளனர். இதனால், நாடு முழுவதும் உள்ள 200 ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மால்டா டவுன்- லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹவுரா - டில்லி துரோந்தோ ரயில் உள்ளிட்ட 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன