சென்னை சுங்கத்துறை சார்பில் விடுதலை பெருநாள் கொண்டாட்டம்
75 வது இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், சென்னை சுங்கத்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கு ஓவியம் வரைதல், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முழக்கம் எழுதுதல் ஆகிய போட்டிகள் மீனம்பாக்கத்தில் நடைபெற்றது.
இதில் 5 பள்ளிகளைச் சேர்ந்த 52 மாணவ மாணவிகள் பங்கேற்று “எனது கனவு இந்தியா ” என்ற தலைப்பில் ஓவியம் வரைந்தனர். இதேபோல் ‘மறைமுக வரிகள்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் முழக்கம் எழுதும் போட்டியில் 100 சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு கே ஆர் உதய் பாஸ்கர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கினார். மேலும் இந்திய விமான நிலைய ஆணையம். சார்பில் மரம் நடும் விழா
75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், பொதுத்துறை நிறுவனங்கள் சார்பில் 2022 ஜூன் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை நாடு முழுவதும் 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடைப்பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய விமான நிலைய ஆணைய தெற்கு மண்டலம் சார்பில் அதன் ஆளுகைக்குட்பட்ட ஒவ்வொரு விமான நிலையங்களிலம் தலா 50 மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதன் படி, சென்னை முகலிவாக்கம் விமான நிலைய அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் கடம்பம், அசோகா, நாகார்ஜூனா உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் மண்டல செயல் இயக்குனர் (தெற்குமண்டலம்) திரு. மாதவன், விமான நிலைய அதிகாரி முருகானந்தன் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்
கருத்துகள்