புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் இந்தியாவில் ஊதிய அறிக்கை - ஒரு முறைசார்ந்த வேலைவாய்ப்பு கண்ணோட்டம்
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளி விவர அலுவலகம் 2017 செப்டம்பர் முதல் 2022 ஏப்ரல் வரையிலான காலத்தில் நாட்டின் வேலைவாய்ப்பு கண்ணோட்டம் குறித்த செய்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. சில குறிப்பிட்ட பரிமாணங்களில் தெரிவு செய்யப்பட்ட அரசு முகமைகளின் மதிப்பீட்டுடன் நிர்வாக ஆவணங்கள் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஊழியர் வருங்கால வைப்புநிதித் தி்ட்டம் (இபிஎஃப்) , ஊழியர்களுக்கான அரசு ஈட்டுறுதித் திட்டம் (இஎஸ்ஐ), தேசிய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) ஆகிய மூன்று முக்கிய திட்டங்களின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை குறித்த தகவலை
பயன்படுத்தி 2017 செப்டம்பர் முதல் முறைசார்ந்த தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளி விவரம் வெளியிடப்படுகிறது.
இபிஎஃப் திட்டத்தில் 2017 செப்டம்பர் முதல் 2022 ஏப்ரல் வரை 5,37,79,149 புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர். இதே காலத்தில் இஎஸ்ஐ திட்டத்தில் 6,61,33,146 புதிய சந்தாதாரர்களும் மத்திய, மாநில அரசுகள் பெரு நிறுவனங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 35,34,193 புதிய சந்தாதாரர்களும் இணைந்துள்ளனர்.
அடுத்த அறிக்கை 25.07.2022 ல் வெளியிடப்படும்
கருத்துகள்