காபூலில் உள்ள கார்டே பர்வான் குருத்வாரா மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு பிரதமர் கண்டனம்
ஆப்கானிஸ்தானின் காபூலில் உள்ள கார்டே பர்வான் குருத்வாரா மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காகவும் அவர் பிரார்த்தனை செய்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் செய்துள்ளார்;
"காபூலில் உள்ள கார்டே பர்வான் குருத்வாரா மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலால் அதிர்ச்சியடைந்தேன். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நான் கண்டிக்கிறேன், மேலும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன்."
கருத்துகள்