கான்பூரில் உள்ள பாரவுங்க் கிராமத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
குடியரசு தலைவரின் மூதாதையர் கிராமத்திற்கு அவருடன் சென்றார்
"ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதற்கு சிறந்த உதாரணம் பாரவுங்க்"
"அரசியல் சாசனம் மரபு இரண்டையும் உள்ளடக்கியவர் குடியரசு தலைவர் "
"இந்தியாவில், ஒரு கிராமத்தில் பிறந்த ஏழைகள் கூட குடியரசு தலைவர்-பிரதமர்-ஆளுநர்-முதலமைச்சர் பதவிகளை அடைய முடியும்"
"இந்தியாவின் கிராமங்களை மேம்படுத்துவது நமது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும்"
"ஏழைகளின் நலனுக்காக நாடு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உழைத்துள்ளது"
“குடும்ப அரசியலின் பிடியில் சிக்கியிருக்கும் கட்சிகள் இந்த நோயிலிருந்து தங்களை விடுவித்து, தங்களைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போதுதான் இந்திய ஜனநாயகம் வலுப்பெறும், நாட்டின் இளைஞர்கள் அரசியலில் சேர அதிகபட்ச வாய்ப்பு கிடைக்கும்’’
பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்துடன் கான்பூரில் உள்ள பாரவுங்க் கிராமத்தில் உள்ள பத்ரி மாதா மந்திருக்குச் சென்றார். பின்னர் அவர்கள் டாக்டர். பி ஆர் அம்பேத்கர் பவன், அதைத் தொடர்ந்து மிலன் கேந்திராவிற்கு சென்றனர். கேந்திரா என்பது குடியரசு தலைவரின் மூதாதையர் இல்லமாகும். இது பொது பயன்பாட்டிற்காக நன்கொடையாக வழங்கப்பட்டு, சமூக மையமாக (மிலன் கேந்திரா) மாற்றப்பட்டது. பாரவுங்க் கிராமத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் இரு தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நாட்டின் முதல் பெண்மணி திருமதி சவிதா கோவிந்த், உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், குடியரசுத் தலைவரின் குழந்தைப் பருவத்தைக் கண்ட கிராமத்திற்குச் சென்று அவர் நாட்டின் உயரிய பதவிக்கு வந்திருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். இந்த விஜயத்தின் போது குடியரசு தலைவர் தம்முடன் பகிர்ந்து கொண்டதை அவர் நினைவு கூர்ந்தார். குடியரசு தலைவரின் வாழ்க்கைப் பயணத்தின் வலிமையை அவர் பாராட்டினார்.
இந்தியாவின் சிறந்த கிராமங்களின் வலிமையை உணர்ந்ததாக பிரதமர் கூறினார். ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் சிறந்த உதாரணம் இந்த கிராமம் என்றார் அவர். பத்ரி மாதா மந்திர் தேவ பக்தி மற்றும் தேச பக்தி இரண்டையும் குறிக்கிறது. குடியரசுத் தலைவரின் தந்தையின் சிந்தனைச் செயல்பாட்டிற்கும் கற்பனைக்கும் அவர் தலைவணங்கினார்.
பாரவுங்க் கிராமத்தின் மண்ணில் இருந்து குடியரசு தலைவர் பெற்ற மரபுகளை இன்று உலகம் கண்டு வருவதாக பிரதமர் கூறினார். அரசியல் சாசனம் மரபு இரண்டையும் உள்ளடக்கியவர் குடியரசு தலைவர் இரண்டையும் பிரதிநிதித்துவப்படுத்துதாக கூறிய அவர், நெறிமுறைகளை மீறி பிரதமரை ஹெலிபேடில் வரவேற்று ஆச்சரியப்படுத்தினார். விருந்தினரை வரவேற்பதில் தாம் மூதாதையரைப் பின்பற்றுவதாக குடியரசு தலைவர் கூறியதை பிரதமர் நினைவு கூர்ந்தார். குடியரசுத் தலைவரின் சிறந்த செயலுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதி தமது மூதாதையர் இல்லத்தை 'மிலன் கேந்திரா'வாக மேம்படுத்துவதற்கு வழங்கியதாக திரு மோடி குறிப்பிட்டார். இன்று ஆலோசனை மற்றும் பயிற்சி மையமாக பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கு புதிய பலத்தை அது அளித்து வருகிறது. இதேபோல், டாக்டர். பி ஆர் அம்பேத்கர் பவன் பாபாசாகேப் அம்பேத்கரின் கொள்கைகளை ஊக்குவித்து வருகிறது. கிராம மக்களின் கூட்டு முயற்சியால் பாரவுங்க் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்றும், ஒரு சரியான கிராமத்தின் முன்மாதிரியை நாட்டிற்கு முன்வைக்கும் என்றும் பிரதமர் கூறினார். ஒருவருடைய கிராமம் ஒருவரை அவர் எங்கு சென்றாலும் விட்டுச் செல்வதில்லை என்று பிரதமர் கூறினார். மகாத்மா காந்தி இந்தியாவின் சுதந்திரத்தை இந்தியாவின் கிராமத்துடன் இணைத்து பார்த்தார் என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் கிராமம் என்றால், ஆன்மீகம் இருக்கும் இடத்தில், இலட்சியங்களும் இருக்க வேண்டும், இந்தியாவின் கிராமம் என்றால், பாரம்பரியங்கள் இருக்கும் இடத்தில், முன்னேற்றமும் இருக்கிறது. இந்தியாவின் கிராமம் என்றால், எங்கெல்லாம் கலாச்சாரம் இருக்கிறதோ, அங்கெல்லாம் ஒத்துழைப்பும் இருக்க வேண்டும். அன்பு இருக்கும் இடத்தில் சமத்துவம் இருக்கும். அமிர்த காலத்தின் இந்த காலகட்டத்தில், இதுபோன்ற கிராமங்களை வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. கிராமங்கள், விவசாயிகள், ஏழைகள் மற்றும் பஞ்சாயத்து ஜனநாயகத்திற்காக உழைக்கும் நபர்களின் இந்த உறுதிமொழியுடன் நாடு முன்னேறி வருகிறது என்று அவர் கூறினார். “எங்கள் கிராமங்களில் அதிக ஆற்றல் மற்றும் உழைப்பு சக்தி மற்றும் அதிக அர்ப்பணிப்பு உள்ளது. அதனால்தான் இந்தியாவின் கிராமங்களுக்கு அதிகாரமளிப்பது எங்கள் அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும்”, என்றார் அவர்.
ஜன்தன் யோஜ்னா, பிரதமர் வீட்டு வசதி திட்டம், உஜ்வாலா மற்றும் வீடு தோறும் குழாய் மூலம் குடிநீர் போன்ற திட்டங்களால் கோடிக்கணக்கான கிராமப்புற மக்கள் பயனடைந்துள்ளனர் என்று பிரதமர் கூறினார். "ஏழைகளின் நலனுக்காக நாடு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உழைத்துள்ளது" என்று அவர் கூறினார். இப்போது நாடு அனைத்து திட்டங்களின் 100 சதவீத பலனை 100 சதவீத மக்களுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறது. திட்டங்களின் நிறைவுக்கு இப்போது அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அதிகாரம் கிடைக்கும் என்றார் அவர்.
இந்திய ஜனநாயகத்தின் வலிமையைக் குறிப்பிட்ட பிரதமர், மேடையில் இருந்த குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர் மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆகிய நான்கு முக்கியப் பிரமுகர்களும் கிராமங்கள் அல்லது சிறு நகரங்களில் இருந்து தோன்றியவர்கள் என்று சுட்டிக்காட்டினார். நமது போராட்டங்களும், வறுமை மற்றும் கிராம வாழ்க்கையுடனான நேரடித் தொடர்பும் நமது சன்மார்க்கத்தை வலுப்படுத்தியுள்ளது, இதுவே நமது ஜனநாயகத்தின் பலம், "இந்தியாவில், கிராமத்தில் பிறந்த ஏழை எளியவனும் குடியரசுத் தலைவர்-பிரதமர் பதவியை அடைய முடியும் என்று அவர் கூறினார்.
ஜனநாயக வலிமையின் பின்னணியில், குடும்ப அரசியலுக்கு எதிராக பிரதமர் எச்சரிக்கை விடுத்தார். அரசியலில் மட்டுமின்றி, எல்லாத் துறைகளிலும் திறமைசாலிகளை அடக்கி, புதிய திறமைசாலிகள் வளரவிடாமல் தடுப்பது குடும்ப அரசியல்தான் என்றார். “எனக்கு எந்த ஒரு அரசியல் கட்சி மீதும், எந்த நபர் மீதும் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. நாட்டில் வலுவான எதிர்க்கட்சி இருக்க வேண்டும், ஜனநாயகத்திற்காக அர்ப்பணிப்புள்ள அரசியல் கட்சிகள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்", என்று கூறிய அவர் மேலும் தொடர்ந்து, "வம்சத்தின் பிடியில் சிக்கியுள்ள கட்சிகள் இந்த நோயிலிருந்து தங்களை விடுவித்து தங்களைக் குணப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்திய ஜனநாயகம் வலுவடையும், நாட்டின் இளைஞர்கள் அரசியலில் சேர அதிகபட்ச வாய்ப்பு கிடைக்கும்’’ என்று அவர் குறிப்பிட்டார்.
கிராமத்தில் அமிர்த நீர்நிலை கட்டுவதற்கு உதவுமாறு கிராம மக்களைக் கேட்டுக் கொண்ட பிரதமர், இயற்கை விவசாயத்தை பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார். தற்சார்பு இந்தியாவை அடைவதற்கான வழியை அனைவரும் முயற்சிக்கவேண்டும் என்றும், தற்சார்பு இந்தியாவின் திறவுகோல் தன்னிறைவு கிராமம் என்றும் அவர் உரையை நிறைவு செய்தார்.
குடியரசுத் தலைவரும் கூட்டத்தில் உரையாற்றினார்.
கருத்துகள்