அஇஅதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை
அஇஅதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை
நடைபெறுகிறது. பொதுக்குழுக் கூட்டம் மே மாதம் 23-ஆம் தேதி (வியாழக் கிழமை) சென்னை வானகரத்திலுள்ள ஸ்ரீ வாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்க 2900 உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
இதற்கு முன்னர் நடந்த பொதுக்குழுவில் பிற துணை அணிகளின் மாவட்டச் செயலாளர்கள், துணை நிர்வாகிகளைச் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்குமாறு அழைப்பு அனுப்புவது வழக்கம். ஆனால் இந்த பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படாத நிலையில், அஇஅதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகிலுள்ள ஆவிலிபட்டியைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான எஸ்.சூரியமூர்த்தி தொடர்ந்துள்ள வழக்கின் மனுவில், அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், 2017 ஆம் ஆண்டு கட்சியின் விதிகளுக்கு முரணாக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும்,
இந்தப் பதவிகளை ஏற்றுக்கொண்டு எந்த ஆவணத்தையோ அல்லது கடிதத்தையோ தேர்தல் ஆணையம் அஇஅதிமுகவுக்குத் தரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உரிமையில்லை என்றும், சிவில் நீதிமன்றத்திற்குத்தான் உரிமை உள்ளதென்று சென்னை உயர் நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டியவர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த உரிமையியல் நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை எனவும்
அதிமுகவின் உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது சரிதான் என்று எந்த நீதிமன்றமும் தெரிவிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இது இவ்வாறு இருக்க அஇஅதிமுக அடித்தள தொண்டர்கள் மத்தியில் அஇஅதிமுக கட்சி நிலைக்கவும், வருங்காலத்தை வசப்படுத்திக் கொள்ளவுமான ஒரு தலைமை உள்ளபடியே அந்தக் கட்சிக்கு இன்று இல்லை
இன்றைக்கு அக் கட்சி புத்துயிர் பெற வேண்டுமானால், அதன் முன்பிருக்கும் ஒரே சவால் அது தன்னை பாரதிய ஜனதா கட்சியிடமிருந்து விடுவித்துக் கொள்வது ஒன்று தான்! சிறுகச் சிறுக தன்னை விழுங்கிக் கொண்டிருக்கும் பாஜகவிற்கு ஒப்புக் கொடுத்துக் கொண்ட பிறகு, அதனால் ஓங்கி வளர்வதென்பது ஒரு போதும் இயலாது. உடைக்கப்பட்ட தேங்காய் நிலையில் இருந்து தற்போது சிதறுகாய் நிலையில் உள்ளதை அரசியல் அறிந்தவர்கள் உணர முடியும். பாஜகவிற்கு ஆளும் திமுகவும் பணிந்துவிட்ட பிறகு பாஜகவை எதிர்ப்பதற்கான வெற்றிடத்தை யார் நிரப்புகிறார்களோ, அவர்களே, தமிழ்நாட்டில் மக்களின் நம்பிக்கையையும் வென்றெடுக்க முடியும்.
அதிமுகவின் குழப்பங்களும், சண்டைகளும் பாஜகவிற்கு நல்ல பலன்களைப் பெற்றுத் தரும்! ஆகவே, அதிமுகவின் அழிவை அது வேடிக்கை பார்க்கும், அல்லது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்!
அரசியலில் நல்லவர்கள் அல்ல, வல்லவர்கள் உள்ளிட்ட சாணக்கியத்தனம் மட்டுமே வெற்றி பெற முடியும். வல்லமையை வளர்த்துக் கொண்டார் எடப்பாடி கே பழனிச்சாமி! அதே சமயம் பலவீனமானவர் என்றாலும், புறம் தள்ள முடியாதவர்ஓ.பன்னீர் செல்வம்! பொதுக் குழுவில் என்ன நடக்கும்? பொதுக் குழுவிற்கு பின் அதிமுக என்னவாகும்?
கட்சி மீண்டும் பிளவுபட்டால் உடைந்து சின்னம் முடங்கி விடுமோ என்ற எண்ணம் பலவாறு கட்சியினர் மத்தியில் உண்டு.
ஒற்றைத் தலைமை அது உடனடி சாத்தியமா.. என்று வினா இப்போது எழக் காரணமாக ஏற்கனவே முட்டுக் கொடுத்து வந்த பல நடவடிக்கைகள் இப்போதும் இருக்குமா என்பது தான் எழுவினா ? இது பல மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் அறிவாந்த நபர்கள் மத்தியில் விவாதமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்