இராஜஸ்தான் மாநிலங்களவை தேர்தலில் மொத்தம் 200 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பு காங்கிரஸ் மூன்று இடங்களைப் பிடித்தது. பா.ஜ.க வுக்கு ஓரிடம்
பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக நின்ற ஜீ குழும தலைவர் சுபாஷ் சந்திரா தோல்வி. அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் திவாரி நான்காவது உறுப்பினர் இடத்தில் வெற்றி பெற்றார். இராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ராஜ்ய சபா நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வெற்றி பெற ஒரு வேட்பாளருக்கு 41 வாக்குகள் தேவையான நிலையில் சுபாஷ் சந்திரா 30 வாக்குகள் பெற்றார். அவருக்கு 27 பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளும், 3 ஆர்.எல்.பி வாக்குகளும் கிடைத்தன. சுபாஷ் சந்திரா வெற்றி பெற பாஜக தாண்டி 11 வாக்குகள் தேவையான நிலையில், பிரமோத் திவாரி வெற்றி பெற காங்கிரஸ் தாண்டி 15 வாக்குகள் தேவையாக இருந்த நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் திவாரி வெற்றி பெற்றார்.
தேர்தலின் போது பா.ஜ.க பெண் சட்டமன்ற உறுப்பினர் ஷோபா ராணி குஷ்வாகா , கட்சி மாறி காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்ததாக புகார் எழுந்ததையடுத்து அவர் கட்சியிலிருந்து உடன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு, உரிய விளக்கம் கேட்டு அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகமாநில பா.ஜ.க தலைவர் சதீஷ் பூனியா தெரிவித்துள்ளார். அவர் கட்சி கொரடா உத்தரவு மீறிய நிலையில் அவரது பதவி கட்சித் தாவல் தடை சட்டத்தில் பறிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
கருத்துகள்