காந்தவியல் மற்றும் இடவியலில் நவீன ஞானத்தைப் பெறும் வாய்ப்புகளை வழங்குவதில், இந்திய – ஜெர்மன் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நவீன காந்தவியல் மற்றும் இடவியல் தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள அடிப்படை அறிவியலுக்கான எஸ் என் போஸ் தேசிய மையத்திற்கும், ஜெர்மனி நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நவீன காந்தவியல் மற்றும் இடவியல் தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள அடிப்படை அறிவியலுக்கான எஸ் என் போஸ் தேசிய மையத்திற்கும், ஜெர்மனி நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காந்தவியல் மற்றும் இடவியலில் நவீன ஞானத்தைப் பெறும் வாய்ப்புகளை வழங்குவதில், இந்திய – ஜெர்மன் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது இந்த கூட்டு முயற்சி இலக்காகும். ஒருங்கிணைந்து ஆய்வு செய்வதற்கு அனுபவ மற்றும் கணக்கீட்டு தரவுகள் பகிர்வு, தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை சார்ந்த ஆதரவு பரிமற்றம், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட விஷயங்களில் ஒத்துழைப்புக்கும் இது உதவி செய்யும்.
கருத்துகள்