சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 193.53 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 193.53 கோடிக்கும் மேற்பட்ட (1,93,53,58,865) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 10 கோடிக்கும் மேற்பட்ட (9,99,18,330) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 199.12 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளது.
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,32,457.
கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.30 சதவீதமாக உள்ளது.
குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.49 சதவீதம்
கடந்த 24 மணி நேரத்தில் 15,447 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,30,11,874 என அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 16,906 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 3.68 சதவீதம் ஆகும்
வாராந்திர பாதிப்பு விகிதம் 4.26 சதவீதம் ஆகும்
இதுவரை மொத்தம் 86.77 கோடி கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 4,59,302 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்