அமலாக்கத் துறையினர் 11 மணிநேரம் 11 பேரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் அமைச்சர் உதவியாளர் வீட்டில் 21.90 கோடி பணக்கட்டுகள், நகைகள்
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்திற்காக 2016 ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில்
நடந்த தேர்வில் முறைகேடெனப் புகார் எழுந்தது.
அப்போது மேற்கு வங்காளத்தின் கல்வித் அமைச்சரான பார்த்தா சாட்டர்ஜியாவார் இது குறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. க்கு உத்தரவிடப்பட்டதில் 100 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு காரணமாக அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தியது.
மேற்கண்ட ஊழல் புகாரைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன், அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் 11 மணிநேரம் 11 பேரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் அமைச்சர் பார்த்தாவின் உதவியாளர் அர்பிதா பானர்ஜியின் வீட்டில் 21.90 கோடி ரூபாய் ரொக்கமாகப் பணக்கட்டுகள், நகைகள் ஆபரணங்கள், செல்போன்கள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றியதை யடுத்து, சட்ட விரோதமான பண பரிவர்த்தனை என வழக்கில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியை, ஜூலை மாதம் 23 ஆம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்த சில மணி நேரத்தில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு திடீரென லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் மாநில அரசின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட. பின்னர் உயர் சிகிச்சைக்காக ஒடிசாவிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் பார்த்தா சாட்டர்ஜி நலமுடனிருப்பதாகக் கூறியதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து அவர் நேற்று உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அங்கிருந்து கொல்கத்தா அழைத்து வரப்பட்ட அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியிடம் அமலாக்கத் துறையினர் இன்று விசாரணையை தொடங்கினர். பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதியும் வழங்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெறாத மாநிலங்கள் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றதெனவும் மகாராஷ்டிரா போன்று பல்வேறு மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது மேற்கு வங்காளத்திடம் வந்துள்ளனர். எங்களைத் தாக்க அவர்கள் வங்காள விரிகுடாவைக் கடக்க வேண்டும். சுந்தரவனக்காடுகளைத் தாண்ட வேண்டும். அப்போது அவர்களை வங்கப்புலிகள் பதுங்கி தாக்கும்.முதலைகள் கடிக்கும். வடக்கு வங்காளத்தில் யானைகள் மிதிக்கும் என்றும்.
மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து விடலாமென எண்ணுகிறார்கள். கட்சியை உடைத்து விடலாம் என பாரதிய ஜனதா கட்சி நினைத்தால் அது எண்ணமாக மட்டுமே இருக்கும். விரைவில் உண்மை வெளி வரும். எனது கட்சி உறுப்பினர்களில் திருடனோ, கொள்ளைக்காரனோ இல்லை. அவ்வாறு யாரேனும் இருந்தால் அவர்களை கட்சியில் வைத்திருப்பதில்லை. என் மீது மை வீச முயற்சித்தால் நான் அவர்கள் மீது சகதியை வீசுவேன் என்று மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பதிலளித்துள்ளார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள மேற்கு வங்காள அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என திரிணமுல் காங்., பொதுச் செயலாளர் குனல் கோஷ் கூறியுள்ளார்.
குனல் கோஷ் வெளியிட்ட அறிக்கையில்: 'பார்த்தா சாட்டர்ஜியை உடனடியாக அமைச்சர் மற்றும் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்து நீக்க வேண்டும். இந்த அறிக்கை தவறெனக் கருதினால் என்னை அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்க கட்சிக்கு முழு உரிமை உண்டு. நான் கட்சியின் தொண்டராக பணியைத் தொடர்வேன் ' என்று தெரிவித்துள்ளார்.
கருத்துகள்