குட்ஹா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மற்றும் பி.வி.ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு அனுமதி வழங்க சிபிஐ தமிழ்நாடு அரசுக்கு கடிதம்
குட்ஹா முன்னால் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீது வழக்கு பதிய சிபிஐ முடிவு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் குட்ஹா முறைகேடாக விற்பனை செய்த ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், மற்றும் பி.வி.ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்க சிபிஐ தமிழ்நாடு அரசுக்கு கடிதமெழுதியுள்ளது.
குட்ஹா, பான் மசாலா போன்ற வடநாட்டு மக்கள் அதிகம் படுத்தும் புகையிலை கலந்த போதைப் பொருட்களை உற்பத்தி செய்யவும், விற்கவும் 2013 ஆம் ஆண்டு முதல் மத்திய சுகாதார அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டுள்ளது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு அதை நடைமுறைப்படுத்திய நிலையில் குட்ஹா சம்பந்தப்பட்ட பொருட்கள் தொடர்ந்து சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது தெரிகிறது
அந்த விற்பனையின் பின்னிலையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் முன்னால் அமைச்சர் சி.வி.ரமனா மற்றும் காவல்துறை டிஜிபி உள்ளிட்ட 12 நபர்கள் லஞ்சம் பெற்றிருப்பதாக 2017 ஆம் ஆண்டில் புகார் எழுந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அப்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் காலம்சென்ற ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது 40 கோடி ரூபாய் வரை இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. அந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஒரு பக்கமிருக்க, இதில் இலஞ்சம் வாங்கி, நிதி மோசடி செய்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர், முன்னாள் காவல்துறை இயக்குனர் இராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட 12 நபர்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனையும் நடத்தப்பட்டதுடன் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது பற்றி மக்கள் மத்தியில் ஒரு அவநம்பிக்கை ஏற்பட்ட நிலையில் தற்போது குட்ஹா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவிற்கு எதிராக சிபிஐ தமிழ்நாடு அரசுக்கு கடிதமெழுதியுள்ளது. 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. இதில் தமிழ்நாடு அரசு விரைவில் முடிவு எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள், மற்றும் இந்நாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க வேண்டுமென்றால், அதற்குத் தலைமைச் செயலாளர் அனுமதியளிக்க வேண்டும் என அரசாணை தடைசெய்யும் காரணமாக தற்போது அனுமதி கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிபிஐ அமைப்பின் லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவு சார்பில் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேப் வருவாய் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் சிலரின் பெயர்களும் சிபிஐ வளையத்திலிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளதில் ஏற்கனவே 6 பேருக்கு எதிராக முதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் கூடுதலாக இரண்டாவது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் இந்த வழக்கில் விசாரணை சூடு பிடிக்கலாம் இதில் இந்த குற்றவாளிகள் தப்பிக்க வாய்பில்லை என்று தெரிகிறது தமிழ்நாடு அரசு விரைவில் வழக்குத் தொடுக்க அனுமதி வழங்குமென்று எதிர்பார்க்கப்படுகிறதுபுதுக்கோட்டை மாவட்டம் ஊழல் மலிந்த மாவட்டமாக விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்திலிருந்தே மாற்றப்பட்டது மக்கள் அவர் மீது நடவடிக்கை வராதா என எதிர்நோக்கும் நிலை இருந்தாலும் அவர் ஊழல் செய்து சேர்த்து வைத்துள்ள பல கோடி பணம் அவரை இதுவரை காப்பாற்றி வந்த நிலையில் இனி அதுபோல நடக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது மேலும் அவரது பினாமிகளாக பலரும் இழுப்பூர் பகுதியில் வலம் வரும் நிலையில் அவர்களும் இதில் உடந்தையா என்பதே தற்போது மக்கள் மத்தியில் பேச்சாக உள்ளது.
அமைச்சரும் அரசு ஊழியர் தான் தன் கடமையைச் செய்யவோ அல்லது செய்யாமலிருக்கவோ, ஒரு குறிப்பிட்ட பணியில் சாதகமாகவோ அல்லது பாதகமாகச் செய்யவோ சட்டப்படியாக ஊதியமல்லாத பணத்தை அல்லது பொருளைப் பெறுதல் அல்லது பெற ஒப்புக்கொள்ளுதல் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ஆம் ஆண்டு பிரிவு 7 ன் படி ஊழல் குற்றச்செயலாகும்.
ஒரு நபரோ அல்லது பல நபர்களோ, அரசு ஊழியரை ஒரு குறிப்பிட்ட கடமையைச் செய்யவோ செய்யவிடாமல் தடுக்கவோ, அரசு ஊழியர்க்கு கையூட்டு கொடுப்பதோ பெறுவதோ, ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ஆம் ஆண்டு பிரிவு 8 மற்றும் 9 ன் படி ஊழலாகும்.
ஒரு தனிநபர் இலஞ்சம் கேட்பதற்கு உடந்தையாக உள்ள அரசு ஊழியர் ஊழல் தடுப்புச் சட்டம், 1988 ஆம் ஆண்டு பிரிவு 10 ன் படி ஊழல் செய்தவராகிறார்.
அரசு ஊழியர் ஒருவர், தனது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்து குவித்தால் அது போன்ற குற்றங்களுக்கு ஊழல் தடுப்புச்சட்டம், 1988 ஆம் ஆண்டு பிரிவு 13 ன் படி ஊழல் செய்தவராகிறார். அக்டோபர் மாதம் 1993 ஆம் ஆண்டில் முன்னாள் இந்திய மத்திய உள்துறைச் செயலாளர், என்.என். வோராவால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, குற்றவாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளிடையே உள்ள உறவினால் வரும் பிரச்சனைகளை பற்றி கூறிய அறிக்கை கிட்டத்தட்ட ஒரு இணை அரசாங்கத்தை இயக்கும் குற்றவாளிக் கும்பல்களை எடுத்துக்காட்டியது. மேலும் இந்த அறிக்கை, குற்றவாளி கும்பல்களுக்கு அரசியல்வாதிகளால் மற்றும், அரசியல் கட்சிகளால் மற்றும் அரசுத் துறை செயலர்களால் கொடுக்கப்படும் ஆதரவை விவாதித்தது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.குட்ஹா கமிஷன் பெற்ற வழக்கில் ஏன் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக்கூடாதென்று உயர்நீதிமன்றம் அப்போது கேள்வி கேட்டது. அமைச்சர் மற்றும் காவல்துறை இயக்குனர் மீது புகார் இருந்து பதவியும் விலகாத நிலையில் அதை சிபிஐ விசாரிப்பது தான் சரியாகும்
ஆனால் இவ்வளவு கேள்விகள் எழுந்தும் எந்த ஒரு கவலையும் இல்லாமல் அப்போது இருந்த தமிழ் நாடு அரசு தமிழகம் முழுவதும் குட்ஹா விற்பவர்களைக் கைது செய்துள்ளோம், குட்ஹாவைப் பறிமுதல் செய்துள்ளோமென்று அறிக்கை மட்டுமே வந்தது. இந்த அறிக்கையே இவர்கள் இத்தனை வருடங்களாக இலஞ்சம் வாங்கிக்கொண்டு குட்ஹா விற்க அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஒரு பொருளை தடை செய்த பிறகும் இலஞ்சம் பெற்றுக் கொண்டு அந்தத் தடையை கண்டுகொள்ளாமலிருப்பதும் காலம்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதா முதல்வராக இருந்த அரசாங்கத்தின் வாடிக்கையான செயலாகவே இருந்து வந்தது. குட்ஹா விஷயத்தில் வசமாக தற்போது சிக்கிகொண்டார்கள். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு உடனடியாக அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் அப்போது காவல்துறை டிஜிபி ராஜேந்திரன் இருவரையும் பதவி விலகும் படி அறிவுறுத்தி உடனடியாக அப்போதே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டுமென்று அறப்போர் இயக்கம் கேட்ட நிலையில் இந்தப் பிரச்சனையில் சரியான முடிவு எடுக்கப்படும் வரை அந்த இயக்கத்தின் சார்பில் அனைத்து மட்டங்களிலும் அழுத்தம் கொடுக்கப்பட்டதென்பதையும் நாம் அறிந்ததே 2017 ஆம் ஆண்டு விசாரிக்க வேண்டிய குட்ஹா வழக்கை 2022 ஆம் ஆண்டு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் சிபிஐ. எல்லாம் மேலிருந்து நடத்தும் அரசியல் தான் என சாமானிய மக்களுக்கே புரிகிறது.
கருத்துகள்