மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் முதல் பழங்குடியினக் குடியரசுத் தலைவராக இந்திய வரலாற்றில் முத்திரை பதிக்கிறார் 15 வது குடியரசு தலைவர்
மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி வேட்பாளரான திருமதி திரௌபதி முர்மு
6,76,803 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் சார்ந்த பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா பெற்ற 3,80,177 வாக்குகளை விட 2,96,626 வாக்கு மதிப்புகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடியிருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் நாட்டின் முதல் பழங்குடியினக் குடியரசுத் தலைவராக இந்திய வரலாற்றில் முத்திரை பதிக்கிறார்.
மொத்தமுள்ள 771 நாடாளுமன்ற உறுப்பினர்களில் காலியாக இருக்கும் இடங்களில் உள்ள ஐந்து பேரைத் தவிர மற்றுமுள்ள அனைவரும் வாக்களித்தனர். அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இரண்டு உறுப்பினர்கள், மற்றும் காலியாகவிருக்கும் ஆறு நபர்கள் நீங்கலாக 4,025 பேர் வாக்களித்தனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகா, கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர், மணிப்பூர், மிஷோரம், சிக்ஹிம் ஆகிய மாநிலங்களில் 100 சதவிகித வாக்குப்பதிவு நடைபெற்றிருப்பதாகத் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி திரௌபதி முர்மு அனைத்து மாநிலங்களிலும் ஒரு வாக்கை பெற்ற நிலையில்,
எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஆந்திரப் பிரதேசம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெறவில்லை. குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு முடிந்த நிலையில். 4754 வாக்குகள் பதிவாகின, அதில் 4701 செல்லுபடியாகும் மற்றும் 53 செல்லாதவையாக இருக்கும் நிலையில். ஒதுக்கீடு (ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளருக்கு) 5,28,491. திருமதி. திரௌபதி முர்மு 2824 முதல் விருப்பு வாக்குகளைப் பெற்றதில் 6,76,803.1,877 முதல் விருப்பு வாக்குகள் யஷ்வந்த் சின்ஹாவால் பெறப்பட்டன - மதிப்பு 3,80,177 திரௌபதி முர்மு பெற்ற முதலாவது விருப்பு வாக்குகள் தேவையான ஒதுக்கீட்டை விட அதிகமாக இருந்தது, இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு திருமதி திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தேர்தல் அதிகாரி என்ற முறையில் : பிசி மோடி அறிவித்தார்.
கேரளா மாநிலத்தில் தான் ஒரு வாக்கு மட்டுமே பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பெற்றுள்ளார்.
கேரளா, மேற்க வங்காளம் மற்றும் தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே எதிர் கட்சிகளின் வேட்பாளர் திரு. யசுவந்த் சின்கா பெற்றுள்ளார். ஏனைய மாநிலத்திலிருந்து அவர் ஏன் எதிர்க்கட்சிகள் ஆதரவைப் பெற இயலவில்லை? என்ற நிலையில்
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தான் அதிக எண்ணிக்கையிலிருந்தன. ஆனால் 64.03 விழுக்காடு வாக்குகள் எப்படிப் பெற்றார் ? என்ற வினா மத்தியில் நிலையான வெற்றி பெற்று திருமதி திரௌபதி முர்மு 15 வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதி முதல் இராஷ்டிரபதி பவனில் குடியேறும் நிலையில் எந்த அளவுக்கு வசதியாகவும் பறந்து விரிந்து கிடைக்கிறதோ, அதேபோல இந்தியக் குடியரசுத் தலைவர் விடுமுறை நாட்களைக் கழிக்க இந்தியாவிலேயே இன்னும் இரு பங்களாக்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் நகரத்தில் ராஷ்டிரபதி நிலையம் என்கிற பெயரிலும், இமாச்சலப்பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் ஒரு சொகுசு பங்களாவும் குடியரசுத் தலைவரின் வருகைக்காக எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
இது கோடைக்கால குளிர்கால வாசஸ்தலம் என்றும், வட இந்தியா தென்னிந்தியாவின் ஒற்றுமையையும் கலாச்சாரப் பகிர்வையும் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது இத்தனை பெரிய பிரம்மாண்ட மாளிகையை, சொல்லப்போனால் இந்திய அரசின் முக்கிய குறியீடுகளில் ஒன்றாகத் திகழும் இந்த அலுவலகத்தைப் பராமரிக்க, பாதுகாக்கப் பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவருக்கு உதவ என நூற்றுக்கணக்கான உதவிப் பணியாளர்கள் இருப்பர்.இந்தியக் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்பவர்களுக்கு ஒரு பிரம்மாண்ட கருப்பு நிற மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 w 22 புல்மென் கார்ட் காரும், குடியரசுத் தலைவர் இந்தியாவின் பிரதிநிதியாக மேற்கொள்ளும் பயணங்களுக்கு லிமோஷன் (limousine) காரும் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியக் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பல அம்சங்கள் இந்த கார்களில் பொருத்தப்படுகின்றன.இந்தியக் குடியரசுத் தலைவராக ஒருவர் பொறுப்பேற்று விட்டால் அவருக்கு வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் வாடகை இல்லா ஒரு சொகுசு வீடு போன்றவை வழங்கப்படும் இந்தியக் குடியரசுத் தலைவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள பிரசிடெநன்ட் பாடிகார்ட் (PBG) என்கிற பெயரில் ஒரு தனி பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. இது உலகின் மிக வலிமையான ராணுவங்களில் ஒன்றான இந்திய ராணுவத்தின் மிகப் பழமையான யூனிட் என்பதாகும். பொதுவாக பிபிஜி யூனிட் போர் இல்லாத காலங்களில் பெயருக்குச் செயல்படும் ஒரு யூனிட்டாகவே இருக்கும். போர் மூண்டால் ஒட்டுமொத்த பி பி ஜி யூனிட்டும் களத்திலிறக்கப்படும். பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் புதிய குடியரசுத்தலைவருக்கு சிறப்பு வாழ்த்துங்கள் உரித்தாக்குகிறது.
கருத்துகள்