17-வயதுக்குட்பட்ட மண்டல அளவிலான கேவிஎஸ் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளி பள்ளியில் 5-ஆம் தேதி முதல் நடைபெறும்
விமானப்படை விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ், சுப்ரதோ முகர்ஜி விளையாட்டு கல்வி சொசைட்டி ஆண்டுதோறும் பெருமைமிகு சுப்ரதோ கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்தி வருகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளி அணிகள் இதிலு பங்கேற்று வருகின்றன.
கேந்திரிய வித்யாலயா சங்கம் நாடு முழுவதும் மண்டல வாரியாக இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு மண்டத்திலும், பல்வேறு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையே நடைபெறும் போட்டிகளில் வெல்பவர்கள் தேசிய அளவில் அந்த மண்டலத்தின் பிரதிநிதியாக தேர்வு செய்யப்படுவர்.
இந்த ஆண்டு இந்தப் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை சென்னை ஐஐடி கேந்திரிய வித்யாலயா பெற்றுள்ளது. 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்பார்கள். ஐஐடி விளையாட்டு மைதானத்தில் வரும் 5 முதல் 7-ந்தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 13 பள்ளிகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டியை ஐஐடி விளையாட்டு மைதானத்தில் சென்னை மண்டல துணை ஆணையர் திருமிகு டி ருக்மணி தொடங்கி வைக்கவுள்ளாதக ஐஐடி கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் டாக்டர் மாணிக்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்