பாதுகாப்பு அமைச்சகம்
முன்னோட்டம்
ஒய்-3023 (துணாகிரி) தொடக்க விழா
துணாகிரி, 17ஏ போர்க்கப்பல், கொல்கத்தாவில் 15 ஜூலை 2022 அன்று ஹூக்ளி ஆற்றில் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மலைச்சிகரமான ‘துணாகிரி’ பெயரில் கட்டப்பட்டுள்ள இந்த போர்க்கப்பல், பி17ஏ ரக போர்க்கப்பலின் நான்காவது கப்பலாகும்.
மேம்பட்ட போர்த்திறன், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார் சாதனங்கள் மற்றும் நடைமேடை மேலாண்மை அமைப்புகளை கொண்ட பி17ஏ போர்க்கப்பலின், (ஷிவாலிக் வகை) தொடர்ச்சியாகும். பி17ஏ திட்டத்தின் முதல் 2 கப்பல்கள் 2019 மற்றும் 2020-ல் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மூன்றாவது கப்பலான உதயகிரி, இந்த ஆண்டு மே 17 அன்று பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அதன் பின் மிக குறுகிய காலத்திலேயே நான்காவது கப்பலும் பணியில் ஈடுபடுத்தப்படுவது, கப்பல் கட்டுவதில் தற்சார்பை நோக்கிய பயணத்திற்கு உத்வேகம் அளிக்கும்.
இந்த கப்பல் இந்திய கடற்படையின், கடற்படை வடிவமைப்பு இயக்குனரகத்தால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டதாகும்.
கருத்துகள்