ஆட்சேபணைச் சான்றிதழ் வழங்க ரூ 3.30 லட்சம் இலஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கைது
ஆட்சேபணைச் சான்றிதழ் வழங்க ரூ 3.30 லட்சம் இலஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கைது
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள குளத்தூர் கிராமத்தில் ஆட்சேபணைச் சான்று வழங்குவதற்கு மூன்று லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் இலஞ்சம் கேட்ட புகாரில் வருவாய் ஆய்வாளர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டனர்.
பனையூர் கிராம முனியசாமிக்கு அரசு இலவசமாக வழங்கிய அசைன்மென்ட்டு பட்டா உள்ள நிலத்தை விற்க ஆட்சேபணை இல்லை என சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தார்.
14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் விற்பனை செய்யலாம் என்ற அடிப்படையில் 2004 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட நிலத்தை, அவர் விற்பதற்காக விண்ணப்பித்த நிலையில், சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் கேட்டதையடுத்து, முனியசாமி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகாரளித்தார்.
பின்னர், அவர்கள் வழிகாட்டுதல் படி வழங்கப்பட்ட பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் . உமேஷ் குமார் மற்றும் வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன் இருவரும் கைது செய்யப்பட்டனர். நடந்த சம்பவம் வருமாறு முனியசாமி மனு, விசாரணைக்காக குளத்தூர் கீழ்பாகம் கிராம நிர்வாக அலுவலர் உமேஷ் குமாரிடம் வந்தது.
அவர் ரூ.5,000 லஞ்சமாகப் பெற்று வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகனிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையை பரிசீலினை செய்து உறுதிபடுத்திட வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகன், முனியசாமியை அழைத்து, ``ஒரு ஏக்கருக்கு ரூபாய் .30,000 வீதம் 10.95 ஏக்கர் நிலத்துக்கு ரூபாய் .3.30 லட்சம் பணம் இலஞ்சமாகத் தரவேண்டும் எனவும் பணம் கொடுத்தால் தான் தடையில்லாச் சான்று தருவேன்” என டிமாண்ட் செய்தாராம். இது குறித்து முனியசாமி, தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ரசாயனம் தடவிய ரூ.3 லட்சத்துக்கான நோட்டுகளை முனியசாமியிடம் கொடுத்தனர். அந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட முனியசாமி, வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகனை தனது செல்போனில் தொடர்பு கொண்டுப் பேசியுள்ளார்.
“நான் இப்போ அருப்புக்கோட்டையிலிருக்கேன். அந்தப் பணத்தை என்னோட ஆபீஸ்லிருக்குற கீழ்பாகம் கிராம நிர்வாக அலுவலர் உமேஷ் குமாரிடம் கொடுத்திடுங்க “ எனக் கூறியுள்ளார் அதை யடுத்து முனியசாமி, குளத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்குச் சென்று அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் உமேஷ் குமாரிடம் ரூபாய் .3 லட்சத்தைக் கொடுத்து, வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகனிடம் பணம் கொடுத்த விஷயத்தை செல்போனில் கூறும் படி சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், “மூணு லட்சம்தானே பணம் கொடுத்திருங்கீங்க. மீதமுள்ள முப்பதாயிரம் பணம் எங்கே?” எனக் கேட்டுள்ளார். அதற்கு முனியசாமி, ”ரெண்டு நாளில் தர்றேன் சார்” எனச் சொல்லியுள்ளார். இந்த உரையாடல்கள் அனைத்தையும் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார் முனியசாமி.இந்த நிலையில், வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தின் அருகில் மறைந்திருந்த தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ், ஆய்வாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட ஊழல் தடுப்பு துறையினர் கிராம நிர்வாக அலுவலர் உமேஷ்குமாரை லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாகப் பிடித்து குளத்தூர் கீழ்பாகத்திலுள்ள அவர் பணி செய்யும் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திய பின்னர், அருப்புக்கோட்டையிலிருந்த வருவாய் ஆய்வாளர் செந்தில் முருகனையும் கைது செய்து கொண்டு வந்து அவரையும் விசாரணை செய்த பிறகு சுமார் 3 மணி நேரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சோதனையிட்டு கோப்புகளை ஆய்வு செய்தனர்.
அதைத் தொடர்ந்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில். சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்துகள்