தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தில் 42 தொழில்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி ஆணையத்திடம் பெறப்பட்ட தகவலின்படி, தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்திற்கான, செயல்படுத்தும் முகமை 42 தொழில்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், ரூ.11,359 கோடி மதிப்பிலான முதலீட்டை ஈட்டியுள்ளது. தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத்தில் உள்ள தொழில்கள் மூலம் ரூ.3,176 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு சலுகைகள் வாயிலாக முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில், அந்தந்த மாநில அரசுகள் தங்களுக்கான சொந்த விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை கொண்டுள்ளன. முதலீட்டாளர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்வதற்கும், தீர்ப்பதற்கும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களுடன் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
புதிய பாதுகாப்பு நிறுவனங்களுக்கு அவற்றின் தேவைக்கேற்ப மனிதவளத்தை பயன்படுத்தும் அதிகாரம் உள்ளது.
இந்த தகவலை மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.சண்முகம் சுந்தரம் மற்றும் பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் திரு.அஜய் பட் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்