மின்சார இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்வதற்கு ரூபாய்.4,500 லஞ்சம் பெற்ற பெண் அலுவலர் கைது. அவரது வீட்டிலும் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை.
தஞ்சாவூர் விளார் சாலையிலுள்ள நாவலர் நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் மனோகரன்(வயது 39). இவருடைய மனைவியின் சகோதரி பத்மினி என்பவர் , தஞ்சாவூர் வசந்தபுரி நகரில் புதிதாக வாங்கியுள்ள வீட்டில் 3 மின் இணைப்புகள் உள்ளதை பெயர் மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் மின் வாரிய அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தார்.
தஞ்சாவூர் மேற்கு மின்சார வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் கணக்கீட்டாளராக இருந்த தேன்மொழி என்பவர் விண்ணப்பத்தை ஆய்வு செய்து ஒரு இணைப்புக்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.1,500 வீதம் 3 இணைப்புகளுக்கும் ரூபாய் .4,500 லஞ்சமாக தருமாறு கேட்டுள்ளார்.ஆனால் லஞ்சம் கொடுத்து மாற்றம் செய்ய விரும்பாத பத்மினி தனது சகோதரியின் கணவர் மனோகரன் உதவி மூலம் தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் செய்த. புகாரின் பேரில் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜூ, ஆய்வாளர் சரவணன் ஆகியோர் ஆலோசனை படி லஞ்சப் பணம் பினாப்தலின் ரசாயனம் தடவிய ரூபாய் அரசுதரப்பு சாட்சி முன் வழங்கும் படி அறிவுரை வழங்கினார் மற்றும் பணியாளர்கள் மாறுவேடத்தில் மின் வாரிய அலுவலகத்திற்குச் சென்று பொறி வைத்து கண்காணித்தனர்.
அப்போது மனோகரன், பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் .4,500-ஐ தேன்மொழியிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அதையடுத்து இன்ஸ்பெக்டர் பத்மா விசாரணை செய்து கைது செய்யப்பட்ட தேன்மொழியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தஞ்சாவூர் பழைய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பிலுள்ள தேன்மொழியின் வீட்டிற்கும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சென்று சோதனை நடத்தினர்.
கருத்துகள்