68 வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதில் சிறந்த நடிகர் சூர்யா, நடிகை அபர்ணா பாலமுரளி,
பின்னணி இசை, படம், திரைக்கதை உள்ளிட்ட 5 விருதுகளை சூரரைப் போற்று திரைப்படம் வென்றுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படமாக வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் தேர்வாகியது.
இரண்டாண்டுகளாக கொரோனா பரவல் இருந்ததால் தேசிய விருது வழங்கும் அறிவிப்புகள் தள்ளிப் போனது. 2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவல் தாக்கம் காரணமாக திரையரங்கங்கள் பல மாதங்களாக மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதனால், வழக்கத்தை விட குறைவான படங்களே வெளிவந்தன. அவற்றோடு புதிதாக ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியான படங்களுமுள்ள நிலையில் 2020 ஆம் ஆண்டிற்கான 68 வது தேசிய திரைப்பட விருதுகள் பற்றிய அறிவிப்பை டில்லியில் வெளியிடப்பட்டது.
சுதா இயக்கத்தில் சூர்யா நடித்து ஓடிடியில் வெளியான படம் ‛சூரரைப்போற்று'. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. அபர்ணா பாலமுரளி நாயகியாக நடித்தார். ஜி.வி,பிரகாஷ் இசையமைத்தார். இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதில் இந்த படம் சிறந்த நடிகர், நடிகை, படம், பின்னணி இசை மற்றும் திரைக்கதை என 5 தேசிய விருதுகளைப் பெற்றது
இயக்குனர் வசந்த் சாய் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் மொழி வாரியாகத் தேர்வான திரைப்படங்களில் சிறந்த தமிழ் படமாகத் தேர்வாகியுள்ளது. மேலும் இந்த படத்திற்கு சிறந்த துணை நடிகை லட்சுமி பிரியா மற்றும் சிறந்த எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்க்கு விருதும் கிடைத்தது.
அறிமுக இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு கதையின் நாயகனாக நடித்த மண்டேலா திரைப்படம் தொலைக்காட்சி மூலம் நேரடியாக வெளியா இந்தப் படத்திற்கு சிறந்த வசனம் மற்றும் அறிமுக இயக்குனருக்கான இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன.
சிறந்த தமிழ் திரைப்படம் : சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிறந்த படம் : சூரரைப்போற்று
சிறந்த நடிகர் : சூர்யா (சூரரைப்போற்று)
சிறந்த நடிகை : அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று)
சிறந்த இயக்குனர் : சாச்சி (அய்யப்பனும் கோஷியும்)
சிறந்த அறிமுக இயக்குனர் : மடோன் அஸ்வின் (மண்டேலா)
சிறந்த துணை நடிகர் : பிஜூ மேனன் (அய்யப்பனும் கோஷியும் - மலையாளம்)
சிறந்த துணை நடிகை : லட்சுமி பிரியா (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
சிறந்த பின்னணி இசையமைப்பாளர் : ஜிவி பிரகாஷ் (சூரரைப்போற்று)
சிறந்த திரைக்கதை : சுதா கொங்கரா - ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)
சிறந்த எடிட்டர் : ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
சிறந்த இசையமைப்பாளர் : தமன் (அலவைகுந்தபுரம் - தெலுங்கு)
சிறந்த வசன அமைப்பு : மடோன் அஸ்வின் (மண்டேலா)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டில் பல்வேறு மொழிகளில் வெளியான திரைப்படங்களில் சிறந்தவற்றை தேர்வு செய்து மத்திய அரசு விருதுகளை வழங்கிவருகிறது. சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர், நடிகைகள் உள்பட பல்வேறு கலைகளில் சிறப்பாக திரைப்படங்களுக்கு பங்காற்றிய கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும். அதன்படி, 2020-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான 68-வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைப்படங்கள் எடுக்க மிகவும் சாதகமான மாநிலமாக மத்தியப் பிரதேசம் அறிவிப்பு
'அலா வைகுந்தபுரமுலோ' தெலுங்கு படத்திற்கு இசையமைத்த தமனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிப்பு
சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது, மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கு அறிவிப்பு
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு தேசிய விருது அறிவிப்பு
அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்) படத்திற்காக சச்சிதானந்தனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது அறிவிப்பு
அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்) படத்திற்காக பிஜு மேனனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது அறிவிப்பு
அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்) படத்திற்காக நஞ்சம்மாவுக்கு சிறந்த பின்னணி பெண் பாடகருக்கான விருது அறிவிப்பு
அய்யப்பனும் கோஷியும் (மலையாளம்) படத்திற்காக ராஜசேகர், சசி, சுப்ரிம் சுந்தருக்கு சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது அறிவிப்பு
சிறந்த வாழ்க்கை வரலாற்று திரைப்படம் (Non-Feature): பபுங் ஷ்யாம் (மணிப்புரி) அறிவிப்பு
கல்வி தொடர்பாக எடுக்கப்பட்ட சிறந்த படம் (Non-Feature): Dreaming of woods (மலையாளம்) அறிவிப்பு
சிறந்த சினிமா விமர்சகர் விருது யாருக்கும் அறிவிக்கப்படவில்லை.
கருத்துகள்