குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜெகதீப் தன்கர் போட்டி பாஜக தலைமை அறிவிப்பு
2022 ன் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜெகதீப் தன்கர் நிறுத்தப்படுவதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார்.
ஜக்தீப் தன்கர் 18 மே 1951 ல் ராஜஸ்தான் மாநிலத்தில் கித்தானா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். சித்தோர்கர் சைனிக் ராணுவ பயிற்சிப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர்,
செய்ப்பூர், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். ராஜஸ்தான் மாநிலத்தில் சுன்சுனூ மக்களவைத் தொகுதியிலிருந்து 1989-91 ஆம் ஆண்டில் ஒன்பதாவது மக்களவையில், ஜனதா தளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராவார்.
ராஜஸ்தானின் கிஷன்கர்ட் தொகுதியிலிருந்து 1993-98 ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் 10 வது சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.,
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் முன்னாள் தலைவருமாவார். 30 ஜூலை 2019 அன்று, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இவரை மேற்கு வங்காள ஆளுநராக நியமித்தார். தற்போது குடியரசு துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
கருத்துகள்