மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அதிகார வரம்பு கடந்தது குறித்து மாநில உயர்கல்வி அமைச்சர்
முனைவர் க.பொன்முடி விழாவை புறக்கணித்திருக்கிற நிலையில், பட்டமளிப்பு விழா இரத்து செய்யப்பட்டு, இணைவேந்தரின் இசைவோடு விழா நடத்த கோரிக்கை வலுத்து வருகிறது தமிழ்நாடு மாநில ஆளுநர் ஆன்.என்.ரவி கலந்து கொள்ளும் நிகழ்வுகளில் அரசியல் உட் புகுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அது தொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்ததில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தினந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்வதை தனது வழக்கமாக வைத்திருக்கிறார். சர்ச்சைக்குரிய கருத்தைச் சொல்லி தன்னை நோக்கி அனைவரையும் பார்க்க வைக்கும் நோக்கத்துடன் இப்படி ஆளுநர் நடந்து கொள்கிறாரோ? என்ற சந்தேகம் ஏற்படும் வண்ணம் அவரது கருத்துக்கள் தமிழ்நாட்டின் பொதுவெளியில் அமைந்து வருகின்றன”
எனக் கூறியிருந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, ஜூலை மாதம் 13 ஆம் தேதி நடைபெற்றவுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54 வது பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கவுள்ளதாகவும், இது தொடர்பாக தன்னிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்.
பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் அரசியலை புகுத்த ஆளுநர் முயற்சிக்கிறார் என சந்தேகம் எழுந்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக அரசிடம் எதுவும் ஆலோசிக்காமல் பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் பேசியவர், “பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர், இணைவேந்தர், இதன் பின்பு ஒரு சிறப்பு விருந்தினர் அழைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த மரபு முறைகளை எதுவும் கடைபிடிக்காமல், கெளரவ விருந்தினராக இணை அமைச்சர் எல்.முருகன் அழைக்கப்பட்டதன் நோக்கமென்ன?” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
கருத்துகள்