கோயமுத்தூர் மாநகராட்சிக் குடிநீர் விநியோகத்தை, பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனம் 400 மில்லியன் யூரோ மதிப்பில் ஒப்பந்தம் போட்டது.
கோயமுத்தூர் மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் முதலாவதாக, பில்லூர் இரண்டாவதாக, ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் நாளொன்றுக்கு, 220 எம்.எல்.டி தண்ணீர் விநியோகிக்கப்படுகிறநிலையில், 24 மணி நேரமும் குடிநீர் விநியோகிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டு சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமானது முப்பதாண்டுகளுக்கு, 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
திட்டத்தைச் செயல்படுத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தனியார் நிறுவனம் முதல் ஒரு வருடத்தில் திட்டக் கள ஆய்வும், பின்னர் நான்கு ஆண்டுகளில் திட்டத்தைச் செயல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது
கோயமுத்தூர் மாநகராட்சி திட்டம் குறித்து சூயஸ் நிறுவனம் தன்னுடைய இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்தியாவின் கோயமுத்தூரில் .6 மில்லியன் குடியிருக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் மற்றும் செயல்படுத்தும் திட்டத்திற்கு சூயஸ் நிறுவனத்தை கோயமுத்தூர் மாநகராட்சி தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் 26 ஆண்டுகள் கொண்ட 400 மில்லியன் யூரோஸ் மதிப்புடைய மிகப்பெரிய குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை சூயஸ் வென்றுள்ளது.
எங்களின் முதல் பணி 2012-ஆம் ஆண்டில் டெல்லியின் மால்வியா மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் மற்றும் விநியோகம் செய்ததாகும். அதே போன்று இந்தியாவின் மெட்ரோ நகரங்களான கொல்கத்தா, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களிலும் குடிநீர் வழங்கல் மற்றும் விநியோகம் செய்யும் பணிகளை வெற்றிகரமாகச் செய்துள்ளோம்" என்று தெரிவித்த தகவல் இடம்பெற்றுள்ளது.
தற்போது சூயஸ் நிறுவனம் திட்டத்திற்காக நேரடியாகக் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் குடிநீருக்காக தனியார் நிறுவனம் அதிகமாக கட்டணம் வசூலிக்கும் எனவும் குடிநீருக்கான கட்டணத்தை மாநகராட்சி வசூலிக்காததனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் எனவும். நிறுவனம் நிர்ணயிக்கும் அளவிற்கு கட்டணத்தைச் செலுத்த மறுத்தால் விநியோகம் நிறுத்தப்படுமென்று மக்கள் மத்தியில் பயம் மற்றும் பீதி காரணமாக எதிர்ப்பு எழுந்துள்ளது. கோயம்புத்தூர் குடிநீர் விநியோக பிரான்சின் சூயஸ் கம்பெனிக்கு ரூபாய் 3100 கோடிக்கு 30 வருஷம்னு தாரை வார்த்த போதே ஊரிலுள்ள மக்களுக்கு இனி சொந்தமா போர்வெல்லோ கிணறோ வைத்திருக்க முடியாதென பயம் நிலவிய நிலையில்
தண்ணிர்னு எவ்வளவு விலைக்கு , எவ்வளவு அளவு தருகிறார்களோ அந்த அளவைத்தான் உபயோகிக்க வேண்டும். அதுவும் உத்தரவு தந்த போது அந்த நிறுவனம் ஆர்டிஐ-2005 ன் கீழ் வாராதென தெளிவாகவே சொல்லியிருக்க. அவர்கள் போட்ட பணத்தை எடுத்து விடுவார்கள். அதில் இலாபத்துடன்.
சில வருடங்களுக்கு முன்னால் மத்திய அரசு ஜல்சக்தி அமைச்சகம் தண்ணீரைப் பொதுப் பிரிவிலிருந்து வணிகப் பயன்பாட்டுப் பிரிவில் கொண்டு வந்த போதே இப்படித்தான் வருமெனத் தெரியும்.
கடைசியாக எந்த நிலையில் வர வேண்டுமோ அங்கே வந்தாயிற்று. இப்போது கூட பலர் பதறிப்போய் ரூபாய் பத்தாயிரம் கட்டும் படி சொல்கிற நிலையில் எதிராகக் கொதிக்கும் நிலை. விஷயம் அதிலில்லை அப்படிக் கட்டிய பின்னர் கணக்கில் வரவானதும் அதில ஒரு மீட்டர் மாட்டி எடுக்கற தண்ணீர் அளவுக்கு காசு உண்டா இல்லையா என்பதை அறிந்த பிறகு தான் உண்மை வரலாறு தெரியும்.
பணம் கட்டு இல்லை போர்வெல்ல மூடிவிடு இந்த நிலையில் முதலில் தங்க நாற்கரச்சாலைனு வந்தபோது ஆஹா ஓஹோவெனப் புகழ்ந்த மக்கள் (டோல் கேட்) அதாவது சுங்க வரிக் கம்பெனி சுங்க வரி எவ்வளவு சொல்கிறதோ கட்டிட்டு சரி எனப் பாஸ்ட் டிராக் பயணம் போவது போல
கோயமுத்தூர் மட்டுமல்ல ஈரோடு கூட அபெக்ஸ் கம்பெனிக்கு (பெக்டெல் கம்பெனி பினாமி) தாரை வார்த்த நிலையில் பலவருஷமாகிறது. இனி ஒவ்வொரு நகரமாக.இநத நிலை வந்தால்
பாலாற்றுப் படுகை மொத்தமும் தோல்கம்பெனி புண்ணியத்தால் காவேரித் தண்ணீரை நம்பி சந்தோசமாக இருக்கிறதால் அவங்களுக்கு கஷ்டமே இல்லை இரண்டுநாள் காவிரி கூட்டுக் குடிநீரை நிறுத்தினால் கூட மக்கள் குடிக்க நீர் கிடைக்காது. அதனால்
ஆயிரம் கோடியை தூக்கி கூட்டுக் குடிநீர் திட்டத்தில தண்ணீர் குடியுங்கள் என நம் மக்களிடம் சும்மாவே தூக்கித் தருவதற்கு ஜப்பான் நாடு என்ன தர்மவான்களா ? வியாபாரம் நடத்தும் வியாபாரிகள்.அந்தந்தப் பகுதிகளில்‘ தண்ணீர் பயன்படுத்துவோர் சங்கம்‘ என அமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்த அமைப்பினர், பயன்படுத்தப்படும் தண்ணீருக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அவரவர் எல்லைக்குள் தண்ணீர் வழங்கும் முகமையாக இவர்கள் செயல்பட வேண்டும்.தண்ணீரை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும் தண்ணீர் ஒழுங்கு முறை ஆணையம் என்ற ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்த ஆணையம் தண்ணீருக்கு கட்டணம் விதிக்க வேண்டும். பயன்பாட்டுக்கு ஏற்ப தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். இந்த கட்டண விகிதம் ஆண்டுதோறும் மாற்றப்பட வேண்டும். நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப கட்டணங்கள் வசூலிக்கப்படுதல் வேண்டும்.தண்ணீர் மாசுபடுவதை தவிர்க்க வேண்டும். தண்ணீரின் நீரோட்ட கோணத்தை மாற்றக்கூடாது. நிலத்தடி நீர் மட்டம் உயர்வதை உறுதி செய்ய வேண்டும். அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான சரியான திட்டமிடல்கள் இருத்தல் வேண்டும்.ஆற்றுப்படுகைகள், நீர்நிலைகளின் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் உள்ள எல்லா ஆக்கிரமிப்புகளையும் அப்புறப்படுத்தி, நீர் நிலைகளில் நீர் சென்று சேர வழிவகை செய்ய வேண்டும்.தண்ணீரை சிக்கனமாகவும் முறையாகவும் பயன்படுத்தவே நீர்கொள்கை ஜல்சக்தி அமைச்சகம் மூலம் வகுக்கப்பட்டுள்ளதன் படி தண்ணீரை வர்த்தகப் பொருளாகக் கருதலாம். தண்ணீர் குறித்த சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருந்தாலும் தேசிய அளவிலான பொதுக் கொள்கை உருவாக்கப்படும்.
அதே நேரம் மாநில அரசின் விவகாரங்களில் மத்திய அரசு தலையிடாது. தண்ணீரை விநியோகிக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படும் என்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டு சட்ட முன் வடிவை தற்போது மத்திய அரசு வகுத்துள்ளது.
இந்த சட்ட முன் வடிவுகள் சட்டமானால் நாம் பயன்படுத்தும் தண்ணீருக்கும் பணம் கட்ட வேண்டும் என்பதும், தண்ணீர் விநியோகம் தனியார் மயமாகும். இந்த முடிவு விவசாயிகளுக்கு பலத்த அடி என்பதும் குறிப்பிடத்தக்கது
வறட்சி மற்றும் வெள்ளக்காலங்களில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் போன்ற கருத்துகள் நீர் கொள்கை 2012 ஆம் ஆண்டில் இடம் பெற்றிருந்தது. இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த தேசிய நீர் வளக்கூட்டத்தில் விவாதம் நடந்தது. இதில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்யக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். அது நடக்குமா என்று தான் முடிவு தெரியவில்லை.
கருத்துகள்