பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஆஸ்ரம நிர்வாகி சிவசங்கர் பாபா ஆக்கிரமித்திருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள 7.5 ஏக்கர் நிலத்தை, வருவாய் துறையினர் 5 மற்றும் 7 நோட்டீஸ் ஏற்கனவே வழங்கிய நிலையில் நேற்று 6 நம்பர் நோட்டீஸ் மூலம் மீட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அருகில் புதுப்பாக்கத்தில் சுசில் ஹரி இன்டர்நேஷ்னல் என்ற பெயரில் செயல்படுகிற பள்ளி உள்ளது.
இதன் நிறுவனர் சிவசங்கர் பாபா, வயது 73, மீது, மாணவியர் சிலர் பாலியல் புகார் அளித்ததையடுத்து, சி.பி.சி.ஐ.டி., காவல்துறை, அவர் மீது 'போக்சோ' சட்ட வழக்கு பதிந்து சிறையிலடைத்தனர். அரசுக்குச் சொந்தமான சில இடங்களை, சிவசங்கர் பாபா ஆக்கிரமித்துள்ளதாக, ஏற்கனவே புகார் இருந்த நிலையில், கேளம்பாக்கம் ஊராட்சியில் குப்பைகள் கொட்டுவதற்கு ஏற்ற இடமில்லை என்பதால், அரசு நிலங்கள் எங்கெல்லாம் உள்ளதென, கேளம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் இராணி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்ததில்,
சிவசங்கர் பாபாவின் பள்ளி வளாகத்தில், அரசுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 7.5 ஏக்கர் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்ததையடுத்து, வண்டலுார் தாலுகா வருவாய் வட்டாட்சியர் பாலாஜி, கேளம்பாக்கம் காவல்துறை பாதுகாப்புடன், இரண்டு ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம், பள்ளியின் அலுவலகம் உள்ளிட்ட கட்டடங்களை இடித்தகற்றி, நிலத்தை த்தை மீட்டனர்.
கருத்துகள்