ஜெயராமன் முதல் மனைவி மகன் வாசுதேவன் இரண்டாம் மனைவி மகளான ஜெ. ஜெயலலிதாவின் சட்ட வாரிசாக முடியுமா வழக்கு நிலை
காலம் சென்ற முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் எனக் கூறி, அவரது பாதி சொத்துகளைக் கேட்டு கர்நாடக மாநிலத்தில் மைசூரைச் சேர்ந்த என்.ஜெ.வாசுதேவன்( வயது 83) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவிக்கு தான் பிறந்ததாகத் தெரிவித்துள்ள வாசுதேவன், தனது தந்தை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட வேதவல்லி மூலம் பிறந்த ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் தனது சகோதரர் சகோதரி எனவும், ஜீவானம்சம் கேட்டு மைசூரு நீதிமன்றத்தில் தனது தாய் ஜெயம்மா தொடர்ந்த வழக்கில், வேதவல்லி, ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் எதிர்மனுதாரராக இருந்துள்ளனர்.
ஜெயலலிதாவின் சொத்துகளில் 50 சதவீதம் தர வேண்டும். தீபக், தீபா ஆகியோர் மட்டுமே ஜெயலலிதாவின் வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார். இதில் ஒரு உண்மையும் பொது நீதியும் உண்டு ஜெயராமனுடைய சொத்துக்களுக்கு வேண்டுமானால் இவர் வாரிசாக இருக்கலாம்
ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு இவர் எந்தவகையான சட்டவாரிசு என்பதை புரிந்து வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் கவனித்தாரா என்பதும் இவருக்கு அந்த சொத்துக்கள் உரிமைகள் உண்டா என்பதும் தான் கேள்வி. இவர் ஜெயலலிதா அப்பாவுக்கு முதல் மனைவி என்பது மூலம் இரண்டாம் மனைவி இருவேறு நபர்கள் வாரிசாகாது. தந்தைக்கு வேண்டுமானால் வாரிசு ஆனால் ஜெயலலிதாவின் உடன் பிறந்த ஜெயக்குமார் மகன் மற்றும் மகள் தான் சட்ட வாரிசு தீபாவும் தீபக்கும் மட்டுமே உண்மை மனுதாரரான இவர் வாரிசா என்பதே எழுவினா ஆகவே இதே வினா இவ்வழக்கின் முடிவில் விடைதரும். நம்மைப் பொறுத்தவரை இது ஒரு விளம்பரத்திற்கு உட்பட்ட வழக்காகவே பார்க்க முடியும். மேலும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஜெயலலிதா விற்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் அபராதம் அதை தண்டனை மரணம் அடைந்த காரணமாக இல்லை என்றாலும் அபராதம் கட்ட வேண்டும் அதை அவரது சட்ட வாரிசாக உள்ள நபர்கள் மட்டுமே கட்ட வேண்டும் அல்லது அவரது சொத்துக்களை விற்பனை செய்த பிறகு கட்டவேண்டும் இது குன்ஹா தீர்ப்பு உச்சநீதிமன்றம் உறுதி செய்த நிலையில் இப்போது இதில் புதிய பூதம் கிளம்பியதால் மக்கள் குழப்பம்
கருத்துகள்