வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான முதல் சுற்று பேச்சுவார்த்தைகளை இந்தியா-ஐரோப்பிய யூனியன் நிறைவு
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான முதல் சுற்று பேச்சுவார்த்தைகளை இந்தியா-ஐரோப்பிய யூனியன் நிறைவு செய்துள்ளது
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையேயான புவிசார் குறியீடுகள் உள்ளிட்ட வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்களுக்கான முதல் சுற்று பேச்சுவார்த்தை நேற்று மாலை புதுதில்லியில் முடிவடைந்தது. இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள், மத்திய வர்த்தகத்துறை இணை செயலர் திருமிகு நிதி மணி திரிபாதி, ஐரோப்பிய யூனியனின் தலைமை பேச்சுவார்த்தையாளர் திரு. கிறிஸ்டோஃப் கீனர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
ஒரு வார காலமாக நடைபெற்ற தீவிர பேச்சுவார்த்தைகளில் ,52 தொழில்நுட்ப அமர்வுகளும், புவிசார் குறியீடுகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான 7 அமர்வுகளும் நடைபெற்றன.
இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை செப்டம்பர் மாதம் பிரஸ்ஸல்ஸில் நடைபெற உள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், ஐரோப்பிய ஆணையத்தின் நிர்வாக துணைத் தலைவர் திரு பிரஸ்ஸல்ஸில் வால்டிஸ் டோம்ப்ரோவ்ஸ்கிஸ்.ஆகியோர் பிரஸ்ஸல்சில் கடந்த மாதம் பேச்சுவார்த்தையைத் தொடங்கி வைத்தனர்
ஐரோப்பிய யூனியனுடான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2021-22ல் 116.36 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. உலகளாவிய இடையூறுகள் இருந்தபோதிலும், இருதரப்பு வர்த்தகம் 2021-22 இல் 43.5% வருடாந்திர வளர்ச்சியை எட்டியது. தற்போது ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும், இந்திய ஏற்றுமதிக்கான இரண்டாவது பெரிய இடமாகவும் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம், மதிப்புச் சங்கிலிகளைப் பாதுகாப்பது உட்பட, அதன் பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை மேலும் விரிவுபடுத்துவதற்கும், பல்வகைப்படுத்துவதற்கும் இந்தியாவுக்கு உதவும்.
கருத்துகள்