தமிழ்நாட்டில் கூடங்குளம் மின்நிலையம் தொடர்பாக எவரும் இடமாற்றம் செய்யப்படவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது
தமிழ்நாட்டில் கூடங்குளம் மின்நிலையம் தொடர்பாக எவரும் இடமாற்றம் செய்யப்படவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இதுகுறித்து கேள்விக்கு பதில் அளித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், நிலத்திற்கான இழப்பீட்டு தொகை மாநில அரசு மூலம் இறுதி செய்யப்பட்டு, நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு அத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள 72 பேருக்கு குரூப்-சி பணிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்கள் மூலம், பெருமளவிலான உள்ளூர்காரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சரக்கு மற்றும் சேவை பணி சார்ந்த வர்த்தக வாய்ப்புகளும், உள்ளூர்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்