போட்டி விதிகளை மீறியதற்காக சென்னையை சேர்ந்த டிரய்லர் லாரி உரிமையாளர் சங்கங்களுக்கு எதிராக இந்திய வணிகப் போட்டி ஆணையம் உத்தரவு
இந்திய போட்டிகள் ஆணையம போட்டி விதிகளை மீறியதற்காக சென்னையை சேர்ந்த டிரய்லர் லாரி உரிமையாளர் சங்கங்களுக்கு எதிராக இந்திய வணிகப் போட்டி ஆணையம் உத்தரவை பிறப்பித்துள்ளது
பிரிவு 3(3)வுடன் இணைக்கப்பட்ட பிரிவு 3(3) (a) மற்றும் பிரிவு 3(3) (b) விதிகளை மீறியதாக கண்டுபிடிக்கப்பட்ட 10 டிரய்லர் லாரி உரிமையாளர் சங்கங்களுக்கு எதிராக, இந்திய வணிகப் போட்டி ஆணையம் இன்று இறுதி உத்தரவை பிறப்பித்தது.
இந்த டிரய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம், டிரய்லர்களுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பதில் தலையீடு செய்வதாக குற்றம்சாட்டப்பட்டது. மற்றும் தேசிய கொள்கலன் சரக்கு நிலையம் மற்றும் அவர்களது சகோதர நிலையங்கள் மீது கட்டு்பாடு விதித்தது.
கொள்கலன்களை இயக்குவதற்காக, தங்களுடைய சொந்த டிரய்லர்களை இயக்குவது தொடர்பாக, வர்த்தக சங்க கூட்டங்களில் முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கருத்துகள்