குழந்தைகளுக்கான பிஎம் கேர் திட்டத்தின் கல்வி உதவித்தொகை
குழந்தைகளுக்கான பிஎம் கேர் திட்டம் 2021 மே 29 அன்று பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. பயனாளிகளை கண்காணித்து, திட்டத்தை செயல்படுத்துவதற்காக மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், செயல்பாட்டு முகமையாக நியமிக்கப்பட்டது. கொவிட்-19 பெருந்தொற்றால், பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாப்பாளர் அல்லது தத்தெடுத்த பெற்றோர் ஆகியோரை இழந்த குழந்தைகள், தடையின்றி கல்வியை தொடர பின்வரும் நிதியுதவி திட்டங்கள் உள்ளன.
பள்ளிக்கல்வி
(1) சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால், 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.20,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், நடப்பு நிதியாண்டில் இதுவரை 3,700 பயனாளிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படிப்பு
(1) தொழில்நுட்பக் கல்வி பயில்வதற்காக, ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.50,000 ஸ்வநாத் உதவித்தொகை வழங்கப்படுகிறது. (அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மூலம்)
(2) அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் மூலம் கர்மா திட்டத்தின்கீழ், திறன் பயிற்சி அளித்தல்.
இந்த தகவலை சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் சுஷ்ரீ பிரதிமா பௌமிக், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்