பிரெஞ்ச் விமான என்ஜின் உற்பத்தியாளரான சாஃப்ரான் கு
ழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு
பிரெஞ்ச் நிறுவனமான சாஃப்ரான் குழுமத்தின் உயர்மட்ட குழுவினர், புதுதில்லியில் ஜூலை 5, 2022 அன்று பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர். பயணியர் மற்றும் போர் விமானங்களுக்கான அதிநவீன என்ஜின் அசல் பாகங்கள் உற்பத்தியாளர்களில்,சாஃப்ரான் குழுமம் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது.
இந்த சந்திப்பின் போது, இந்தியாவிலும், வணிக ரீதியான வெளிநாட்டு விமான நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படும் லீப்-1ஏ மற்றும் லீப் -1பி, விமான என்ஜின்களை பராமரித்து, பழுது பார்த்தல் மற்றும் முழுமையான சீரமைப்பு மையம் ஒன்றை தங்களது நிறுவனம் சார்பில் இந்தியாவில் அமைப்பது குறித்து, சாஃப்ரான் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி பாதுகாப்பு அமைச்சரிடம் விளக்கி கூறினார். இந்த மையம் அன்னிய நேரடி முதலீடு வாயிலாக 150 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் ஹைதராபாத்தில் அமைக்கப்படும் என்றும், உயர் திறன் பயிற்சி பெற்ற சுமார் 500-600 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தொடக்கத்தில் ஆண்டுக்கு 250 என்ஜின்களை முழுமையாக பழுதுபார்த்து சீரமைக்கலாம்.
ஹைதராபாத்தில் இந்த வாரம் சாஃப்ரான் விமான என்ஜின்கள் மற்றும் சாஃப்ரான் மின்சார & பவர் இந்தியா நிறுவனத்தையும், பெங்களூருவில் சாஃப்ரான் – எச்ஏஎல் கூட்டு நிறுவனமும் தொடங்கப்பட இருப்பது குறித்தும், சாஃப்ரான் தலைமை செயல் அதிகாரி பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்தார்.
கருத்துகள்