முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசக்கூடாத வார்த்தைகள்

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் பேசக்கூடாத வார்த்தைகளை


ஜூலை மாதம் 18 ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக, மக்களவை செயலகம், லோக் சபா மற்றும் மாநிலங்களவை எனும் ராஜ்ய சபா எனும் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாததாக கருதப்படும் வார்த்தைகள் மற்றும் வெளிப்படுத்தல்களைப் பட்டியலிட்டு புதிய கையேட்டைத் தந்துள்ளது.

இந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, ‘ஜும்லாஜீவி’, ‘பால் புத்தி’, ‘கொரோனா பரவுபவர்’, ‘Snoopgate’ (உளவாளி), ‘அராஜகவாதி’, ‘சகுனி’, ‘சர்வாதிகாரம்’, ‘டனாஷாஹி டனாஷாஹி’ (சர்வாதிகாரம், சர்வாதிகாரம்), ‘வினாஷ் புருஷ்’ (அழிவுகரமான ஆள்), ‘காலிஸ்தானி’ போன்ற வார்த்தைகளை விவாதங்களின் போது அல்லது இரு அவைகளிலும் பயன்படுத்தப்பட்டால் நீக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


“விமர்சனம் மற்றும் கடுமையாக தாக்கும் உண்மைகளுக்கு எதிராக நரேந்திர மோடி அரசாங்கத்தை பாதுகாக்க போடப்பட்டுள்ள வாயடைப்பு உத்தரவு இது” என்று எதிர்க்கட்சிகள் இந்த இந்தப் பட்டியலை சாடியுள்ள நிலையில்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ள ட்வீட்டில், “பிரதமர் அரசாங்கத்தை நடத்துவதைத் துல்லியமாக விவரிக்க விவாதங்கள் மற்றும் உரையாடல்களின் போது பயன்படுத்தப்படும் வார்த்தைகளை பேசுவதற்குத் இப்போது தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகளுக்கான வரையறையாக தெரிவித்துள்ளார்.

“இப்போது, வெட்கக்கேடானது, துஷ்பிரயோகம், காட்டிக்கொடுப்பவர். ஊழல், கபட நாடகம், திறமையற்றவர் போன்ற அடிப்படை வார்த்தைகளை நாடாளுமன்றத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது… நான் இந்த வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துவேன். என்னை சஸ்பெண்ட் செய்யுங்கள். ஜனநாயகத்துக்காகப் போராடுகிறோம்” என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் டெரெக் ஓ பிரையன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அரசியலமைப்பு பிரிவு 105 (2) “எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்திலோ அல்லது அதன் எந்தவொரு குழுவிலோ அவர் கூறியதற்கு அல்லது எந்தவொரு வாக்கெடுப்பிற்கும் எந்த நீதிமன்றத்திலும் எந்த நடவடிக்கைகளுக்கும் பொறுப்பேற்க மாட்டார்கள்” என்று கூறுகிறது. சபைக்குள் என்ன வேண்டுமானாலும் சொல்லச் சுதந்திரமல்லை என்று கூறுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சைச் சரிபார்ப்பது ஒரு உறுப்பினர் என்ன பேசினாலும் அது பாராளுமன்ற விதிகளின் ஒழுக்கம், உறுப்பினர்களின் நல்ல உணர்வு மற்றும் சபாநாயகரின் நடவடிக்கைகளின் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு உட்பட்டது. இந்தக் கட்டுப்பாடுகள் உறுப்பினர்கள் சபைக்குள் அவதூறான அல்லது அநாகரீகமான அல்லது கண்ணியமற்ற அல்லது நாடாளுமன்றத்திர்கு விரோதமான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதை உறுதிப்படுத்துகிறது.

மக்களவை பணிகள் நடைமுறை மற்றும் நடத்தை விதிகளின் விதி 380 (நீக்கம்) பற்றி கூறுகிறது: “அவதூறான அல்லது அநாகரீகமான அல்லது நாடாளுமன்றத்திற்கு விரோதமான அல்லது கண்ணியமற்ற வார்த்தைகள் விவாதத்தில் பயன்படுத்தப்பட்டதாக சபாநாயகர் கருதினால், சபாநாயகர், சபை நடவடிக்கைகளில் இருந்து அத்தகைய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்ற விருப்புரிமை உத்தரவைப் பிரயோகிக்கலாம்” என்று கூறுகிறது.

விதி 381 கூறுகிறது: “அவ்வாறு நீக்கப்பட்ட வார்த்தைகள் சபை நடவடிக்கைகளின் பகுதியில் நட்சத்திரக் குறியீடுகளால் குறிக்கப்படும் மற்றும் ஒரு விளக்க அடிக்குறிப்பு நடவடிக்கைகளில் தலைவர் உத்தரவின் பேரில் பின்வருமாறு சேரக்கப்படும்” என்று கூறுகிறது.

ஆங்கிலத்திலும் பிற இந்திய மொழிகளிலும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. தலைமை அதிகாரம் மக்களவை சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவர் – இந்த மோசமான வார்த்தைகளை நாடாளுமன்றத்தின் பதிவுகளில் இருந்து விலக்கி வைக்கும் பணியாக உள்ளது.

அவர்களின் குறிப்பு மற்றும் உதவிக்காக, லோக்சபா செயலகம், ‘நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தக் கூடாத வெளிப்பாடுகள்’ என்ற தலைப்பில் ஒரு கண்டிப்பான தொனியைக் கொண்டு வந்துள்ளது.

இந்த பட்டியலில் பல வார்த்தைகளும் பல வெளிப்பாடுகளும் உள்ளன. அவை பெரும்பாலான கலாச்சாரங்களில் முரட்டுத்தனமாகவும் அல்லது புண்படுத்தும் விதமானதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், இந்தப் பட்டியல், மிகவும் பாதிப்பில்லாத அல்லது தீங்கற்றதாகத் கருதப்படும் சிந்தனைகளையும் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில சட்டமன்றங்களும் முக்கியமாக அதே புத்தகத்தால் வழிநடத்தப்படுகின்றன. இது இந்தியாவின் சட்டப்பேரவைகள், மற்றும் சட்டமன்ற கவுன்சில்களில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களிலிருந்து பெரிதும் பெறப்பட்டுள்ளது.

இந்தப் புத்தகம் முதன்முதலாக 1999 ஆம் ஆன்டில் தொகுக்கப்பட்டது. அந்த நேரத்தில், சுதந்திரத்திற்கு முந்தைய மத்திய சட்டமன்றம், இந்திய அரசியலமைப்பு சபை, தற்காலிக நாடாளுமன்றம், முதல் பத்தாவது மக்களவை மற்றும் ராஜ்யசபா, மாநில சட்டமன்றங்கள் மற்றும் இங்கிலாந்து போன்ற காமன்வெல்த் நாடாளுமன்றங்கள், ஆகியவற்றால் நாடளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என அறிவிக்கப்பட்ட விவாதங்கள் மற்றும் சொற்றொடர்களில் இருந்து குறிப்புகள் எடுக்கப்பட்டது என்று மக்களவையின் முன்னாள் பொதுச்செயலாளர் ஜி.சி. மல்ஹோத்ரா 2012 ஆம் ஆண்டில் செய்தி நிறுவனத்திடம் கூறியிருந்தார்.

900 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் 2004 ஆம் ஆண்டு பதிப்பின் ஆசிரியர் குழுவின் தலைவராக மல்ஹோத்ரா இருந்தார். “தலைமை அதிகாரிகளின் தீர்ப்புகளைப் பொறுத்து, புதிய வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் சீரான இடைவெளியில் பட்டியலில் தொடர்ந்து சேர்க்கப்படுகின்றன” என்று மல்ஹோத்ரா அந்த நேரத்தில் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளுக்கான எடுத்துக்காட்டுகள்

நாடாளுமன்றத்திற்கு புறம்பாக கருதப்படும் வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களில் ‘ரத்தக்களறி’, ‘ரத்தவெறி’ ‘காட்டிக்கொடுத்தல்’, ‘வெட்கக்கேடு’, ‘துஷ்பிரயோகம்’, ‘ஏமாற்றப்பட்ட’, ‘குழந்தைத்தனம்’, ‘ஊழல்’, ‘கோழை’, ‘குற்றம்’, ‘முதலைக் கண்ணீர்’ ஆகிய வார்த்தைகள் அடங்கியுள்ளன.

(அவமானம்)’, ‘கழுதை’, ‘நாடகம்’, ‘கண் துடைப்பு’, ‘புகை மூட்டம்’, ‘போக்கிரித்தனம்’, ‘கபடநாடகம்’, ‘திறமையற்ற’, ‘தவறாக வழிநடத்துதல்’, ‘பொய்’ மற்றும் ‘உண்மை இல்லை’ போன்ற வார்த்தைகள் இனி நாடாளுமன்றத்தில் பயன்படுத்தத் தடை செய்யப்படும்.

நாடாளுமன்றத்திற்குப் புறம்பானதாக பட்டியலிடப்பட்டுள்ள சில ஹிந்தி வார்த்தைகள், ‘கட்டார்’ (துரோகி), ‘சம்சா’, ‘சம்சகிரி’, ‘செலாஸ்’, ‘கிர்கிட்’, ‘குண்டாஸ்’, ‘காடியாலி’ ‘அன்சு’, ‘அப்மான்’, ‘அசத்யா’, ‘அஹங்கார்’, ‘ஊழல்’, ‘கலா தின்’, ‘கலா பஜாரி’ மற்றும் ‘கரீத் ஃபரோக்த்’ ஆகிய இந்திய வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.

இவை மட்டுமல்லாமல், ‘ஜூம்லஜீவி’, ‘பால் புத்தி’, ‘டங்கா’, ‘தலால்’, ‘தாதகிரி’, ‘டோஹ்ரா சரித்ரா’ (இரட்டை வேடம்), ‘பெச்சாரா’ (பிரயோஜனம் இல்லாதது), ‘பாப்கட்’, ‘லாலிபாப்’, ‘விஸ்வாஸ்காட்’, ‘சம்வேதன்ஹீன்’, ‘ஃபூலிஷ்’ (முட்டாள்தனம்), ‘பித்து’, ‘பெஹ்ரி சர்க்கார்’ மற்றும் ‘பாலியல் துன்புறுத்தல்’ ஆகிய வார்த்தைகளும் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளாகக் கருதப்படும், அவை நாடாளுமன்றப் பதிவின் பகுதியாக சேர்க்கப்படாது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது பேசப்படும் சில முக்கிய வார்த்தைகள் மற்ற வெளிப்பாடுகளுடன் இணைத்து வாசிக்கப்பட்டாலன்றி அவை நாடாளுமன்றத்திற்கு புறம்பானதாக காணப்படாது என்று இந்த பட்டியல் கூறுகிறது.நாடாளுமன்ற நெறி பிறழ் வார்த்தைகள் பட்டியல் - 2022 ல்

அறிமுகப் பகுதியில் சொல்லி இருப்பது போன்று அது பேசப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள  சூழலையும் இணைத்து. பல இடங்களில் திறவு வார்த்தைகளுக்கும், விளக்கக் குறிப்புகளுக்கும் பெரிய வித்தியாசம் குறித்து பார்த்தால் 

Betrayal - துரோகம்

Corruption - ஊழல்

Crocodile tears - முதலைக் கண்ணீர் 

Deceieved - ஏமாற்று 

Derogatory - இழிவான 

Drama - நாடகம் 

Duplicity - இரட்டைத் தன்மை

Eyewash - கண் துடைப்பு

Fake - போலி 

False, Lie - பொய் 

Fraud - மோசடி

Gossipers - வதந்திகள்

Greed - பேராசை

Lack of maturity- முதிர்ச்சியின்மை

Lollipops - லாலிபாப்

Mess - குழப்பம்

Misinformation - தவறான தகவல்

Mislead - தவறாக வழி நடத்துவது

Shame - வெட்கம் 

இவை எல்லாம் தடை செய்யப்பட்ட வார்த்தைகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

பதிவு செய்யும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் கட்டாயம் பதிவுத்துறை தலைவர் சுற்றறிக்கை

ஆவணங்கள் பதிவு செய்யும் போது எழுதிய பத்திரங்களின் கடைசி பக்கத்தில் ஆவண எழுத்தர் பெயர். உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால் பதிவு செய்த பத்திரப் பதிவு செல்லாது      அதோடு தற்போது அவரது புகைப்படம் இணைப்பு வேண்டும். கடைபிடிக்காத ஆவண எழுத்தர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை   பத்திர பதிவுத்துறைமின் சுற்றறிக்கை முழு விபரம்‌ பத்திரப் பதிவு செய்யும் ஆவணங்களில் பதிவு ஆவண எழுத்தர் பெயர், உரிமம் எண், புகைப்படம் இல்லாவிட்டால், அந்த பத்திரப்பதிவு செல்லாது. தமிழகத்தில் போலியான பத்திரங்கள் பதிவாவதைத் தடுக்க மாநில பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் அனுப்பியுள்ள சுற்றறிக்கை அதில், ஆவணத்தை தயார் செய்த ஆவண எழுத்தர் அல்லது வழக்குறைஞர் பார் கவுன்சில் பதிவு எண் பெயர் மற்றும் உரிமம் எண் உடன் புகைப்படம் இணைத்து பதிவு செய்ய வேண்டும். ஆவண எழுத்தரின் புகைப்படமும் அதன் கீழ் அவரது கையொப்பமும் வேண்டும். இந்த நடைமுறை ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறதென அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ள இந்த நடைமுறையை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் மாதிரிப் படிவம் ஒன