கனிமவளக் கொள்ளை முயற்சிகளைத் தடுத்து நிறுத்திய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் லாரி மோதியதில் கொல்லப்பட்டார்.
ஹரியானா மாநிலத்தில் சட்டவிரோதக் கனிமவளக் கொள்ளை முயற்சிகளைத் தடுத்து நிறுத்திய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் லாரி மோதியதில் கொல்லப்பட்டார்.
ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் ஒரு சில கும்பல்கள் கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுகிறது மலையை உடைத்து பாறைகளைக் கடத்துகின்றனர்.
அது குறித்து வந்த ரகசியத் தகவலின் படி மலையை உடைக்கும் கும்பலைப் பிடிக்க காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் . சுரேந்திர சிங் ஜீப்பில் சென்றார். அங்கிருந்து ஒரு லாரியில் பாறாங்கற்கள் ஏற்றிக் கொண்டு எதிரில் வந்ததை மறித்து நிறுத்தச் சொல்லி சுரேந்திர சிங் சைகை காட்டினார். ஆனால் நிறுத்தாமல் அந்த லாரி படுவேகமாக வந்து ஜீப் மீது மோதியதில் ஜீப்பிலிருந்த சுரேந்திர சிங் துாக்கி வீசப்பட்டார். அவரது பாதுகாவலக்குச் சென்றவரும் ஜீப் டிரைவரும் கீழே குதித்துத் தப்பினார்கள். சுரேந்திர சிங்கை சிகிச்சைக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள். அவர் ஏற்கனவே உயிரிழந்ததை உறுதி செய்தனர்.இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் துவங்கி ஹரியானா வரை பறந்து விரிந்த ஆரவல்லி மலை தொடரில் 31 மலைக்குன்றுகள் மாயமானதாக உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி தெரிவித்துள்ள நிலையில்
அதையடுத்து, இந்த மலையில் 115.34 ஹெக்டேரில் நடந்தது வரும் சுரங்கப் பணிகளை 48 மணி நேரத்தில் நிறுத்தும்படி அதிரடி உத்தரவும் பிறப்பித்துள்ளது. வட இந்தியாவிலுள்ள ஆரவல்லி மலைத்தொடர், டெல்லி அருகே தொடங்கி ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் என நாட்டின் மேற்குப் பகுதி வரை பறந்து விரிந்து நீண்டுள்ளது. 700 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மலைத்தொடரில் ராஜஸ்தான் பகுதியிலிருந்த 31 சிறிய மலைகளைச் சுரங்க மாபியாக்கள் சூறையாடி விட்டதாக மத்திய அரசின் அதிகாரமளித்தல் குழு நடத்திய ஆய்வில் தெரிய வந்ததன் காரணமாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.
அதில் தான், இந்த ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ராஜஸ்தான் அரசும் ஆரவல்லி மலைத் தொடரில் நடக்கும் சுரங்கங்களின் நிலவரம் பற்றிய நிலவர அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகூர், தீபக் குப்தா அடங்கிய அமர்வில் சமீபத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்:- ஆரவல்லி மலைத் தொடர் பகுதியில் செயல்படும் சுரங்கங்கள் மூலம் ராஜஸ்தான் அரசு ரூபாய் 5,000 கோடி வருமானமீட்டுகிறது. இப்பகுதியில் 115.34 ஹெக்டேரில் சட்ட விரோதமான சுரங்கங்கள் நடப்பது ஆய்வறிக்கைகள் மூலம் உறுதியாகிறது. தற்போது, அந்த மலைத் தொடரில் 31 சிறிய மலைகள் மாயமாகி விட்டதாக தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது.
கருத்துகள்