உணவு பதப்படுத்துதல் துறையில் வேலைவாய்ப்பு
உணவு பதப்படுத்துதல் என்பது நாட்டின் முக்கிய வேலைவாய்ப்பு மிகுந்த தொழில்களில் ஒன்றாகும். உணவு பதப்படுத்துதல் துறை உட்பட பதிவு செய்யப்பட்ட உற்பத்தித் துறைக்கான தரவு, தொழில்துறையின் வருடாந்திர ஆய்வு மூலம் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது.
2018-19ஆம் ஆண்டுக்கான தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பின்படி, பதிவு செய்யப்பட்ட உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள மொத்த நபர்களில் உணவு பதப்படுத்துதல் துறை 11.22% பங்களித்துள்ளது. 2016-17-ல் 18.53 லட்சம் பேரும், 2017-18ல் 19.33 லட்சம் பேரும், 2018-19ல் 20.05 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
மக்களவையில் இன்று மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில் துறை இணையமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்