முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் குதிரைகள் ஓடிய பின்னர் லாயத்தைப் பூட்டிய காவல்துறை

விளம்பரங்களுக்காக தனியார் பள்ளிகள் எதைச் செய்தாலும் கண்டும் காணாமல் கடந்து போகும் சில ஊடகங்கள், மற்றும் சில பத்திரிகைகள், பல பத்திரிகையாளர்கள் எல்லாம் இன்றைக்குத் தலைகீழ் நிலையில் இருப்பது பார்த்தால் அதிசயமாக மிகவும் ஆச்சர்யமாகிறது,

குற்றமிழைத்தவர்களின் பெயரைக் கூட போடாமல் தனியார் பள்ளி, தனியார் நிறுவனம் என்பது தான் நமது ஊடக தர்மமா என பல்வேறு தரப்பினரும் வினவ

இன்றைக்குப் பெயர் பலகையோடு நேரலையில் பல தொலைக்காட்சிகள் மூன்று தினங்களாகக் காட்டியது ஊடகங்களில் தானாக நடந்த நிகழ்வல்ல, பாதிக்கப்பட்ட மக்கள் புரட்சியால்  மிரளத்தான் தானே செய்வார்கள் ஜனநாயகத்தின் எஜமானர்கள்.


இந்த  நந்தகுமார், மற்றும் பிடி குமார் யார் என்பதும் அவர்கள் வளர்ந்த கதைகளில் பின்னணி குறித்து ஆராய்ந்தால் பல பல்சுவை நாவல்களை எழுதலாம். அவ்வளவு கந்தல் மற்றும் மோசம்.

நகரமயமாக்கல் நடைபெறும் போதே பல அரசுப் பள்ளிகளை அரசு கூடுதல் தேவை கருதி திறக்கவேயில்லை. கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு. இருந்த பல்லாயிரம் அரசுப் பள்ளிகளும் மூடப் பட்டது. ஜெய கோபால் கரோடியா மற்றும் ராம் கோபால் கரோடியாக்களிடமும்.  சின்மயி ஆஸ்ரமம் போலவே அதற்கு முன்னர் உருவான டான் பாஸ்கோ மற்றும் கான் பாஸ்கோ  போன்றவைகளிடம்  நிர்வாக ரீதியாக அவர்களிடம் தானாகவே நகர்ந்து ஒப்படைக்கப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை மற்றும் இரயில்வே துறை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை தான் வேண்டும் எனக் கேட்டு போராடிப் பெற்றவர்கள் என்றாவது கல்வித் துறை அமைச்சகம் வேண்டும் என்று போராடி மத்திய அரசமைப்பில்  கேட்டதுண்டா?


அரசு புதிய பள்ளிகள் அல்லது பள்ளி கடைசியாகத் திறந்த ஆண்டைச் சொல்லுங்கள்? பார்க்கலாம் இதில் எல்லா ஆட்சியாளர்களும் அடங்கும்.

பொதுப்பணித் துறைக்கு ஈடாக வளம் கொழிக்கும் கொழுத்த துறை பள்ளிக் கல்வித்துறை என்றான பின்னர் தான். அதில் சிறப்பு கவனம் வருகிறது. கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான மரணம் தொடர்பாக  குதிரைகள் ஓடிய பின்னர் லாயத்தைப்  பூட்டிய கதையாக காவல்துறை  தமிழகத்தின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற பனீந்திரரெட்டி.,IAS  வடக்கு மண்டல காவல்துறை தலைவர் மற்றும் விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளில் மிகவும் திறமை வாய்ந்த நேர்மையான பொதுமக்கள் நலனில் அக்கறையுடைய பொதுமக்கள் நேரடித் தொடர்பில் ஈடுபடக்கூடிய நேரடி இந்தியக் காவல் பணி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்தப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. தற்போது மிகுந்த மனவேதனை அளிக்கிறது

குழந்தைகளை தனியார் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்த பெற்றோர் முதலாம் உலகப்போர் முடிந்த அமைதியிலும், பின்னர் ஆறாம் வகுப்பு சேர்த்த பெற்றோர் இரண்டாம் உலகப்போர் முடிந்த மகிழ்ச்சியிலும். பணத்தைப்  பலி கொடுத்து மகிழ்ச்சியை விலைக்கு வாங்கி விட்டனர் என்றால் மிகையாகாது. ஒரு காலத்தில் எதுவெல்லாம் இலவசமாக வழங்கப்பட்டனவோ அவை எல்லாம் இன்று விலை கொடுத்து ,கடன் பட்டு அடைய வேண்டிய நிலைக்கு நாம் மக்கள் தள்ளப்பட்டு விட்டோம். தானமாக கருதப்பட்ட கல்வி, உணவு, நீர் ,வேத  பாராயணம் போன்றவைகள் இன்று பல கோடிகள் புழங்கும் தொழிலாக மாறி விட்டது.

ஒரு பக்கம் டாஸ்மாக்க் எனும் மதுபானக் கடைகளைக் கொடுத்து பலர் உடலை அழிக்கும் செயல் இது அரசே செய்யலாமா என வினவும் கூட்டம் அதைத் தாண்டி கேள்விகள் எழுப்பாது. மறு புறம் கல்வி நிலையங்களைக் கண்டு கொள்ளாமல் நம்மை ஏழையாக்கி வருகின்றன. மருத்துவமனைகள்  நம் உறவுகளின் பாசத்தின் வலிமை அறிந்து ரமனா திரைப்பட காட்சி போல பணத்தைப் பிடுங்கி உறவுகளுக்கு உயிர் கொடுக்கிறது. கல்வி நிலையங்கள் நம் பிள்ளைகளின் எதிர்காலம் என்ற பயத்தை காண்பித்து பல லட்சம் கறந்து விடுகிறது.

துப்பாக்கி, கத்தி முனையில் கொள்ளை என்பதெல்லாம் பழைய டெக்னிக். வானளாவிய கட்டடங்களைக் காண்பித்து கல்வி வேண்டுமா? காசு கொண்டு வாருங்கள் என்பதுதான் இன்று நடக்கும் நவீனக் கல்விக் கட்டணக் கொள்ளை. 



கள்ளச் சாராயம், கந்து வட்டித் தொழில் நடத்தியவர்கள், பல சரக்குக் கடை. காய்கறிக் கடை  நடத்தியவர்கள் எல்லாம் கல்வித் தந்தைகளாக உலா வருவதை நாம் அறிவோம். கல்விக் கொடை வள்ளல்களாக வலம் வருகின்றனர். நம் குழந்தைகள் படித்து பணக்காரனாக வர வேண்டும் என்று நினைப்பில் பள்ளியில் சேர்க்கும் பெற்றோர்கள் பிள்ளையின் கல்விச் செலவால் ஏழையாகி, வாழ்வு முழுவதும் கடனாளியாகவே வாழ்வது பள்ளிக் கல்வியின் 'சாதனை'.




திருமண மண்டபத்திற்கு அட்வான்ஸ் தொகை கொடுக்கும் போதே, பெறாத குழந்தைக்கு பள்ளிக்கல்விக்கு அட்வான்ஸ் தொகை கட்டினால் தான் இடம் கிடைக்கும் என்ற நிலைக்கு தமிழக மக்கள் வந்து விட்டனர்.

பள்ளிகளுக்காக பெற்ற தாய், தந்தையை மறந்து, கிராமத்து  கலாச்சாரம், விவசாயம் மறந்து  நகருக்கு குடி வந்தவர்கள் மனதளவில் பட்ட கஷ்டம் மிக அதிகம். ஒரு ரூபாய் கொடுக்காத அரசுப் பேருந்து நடத்துனரிடம் சண்டை போடும் நம் மக்கள் தான், 2 கிலோமீட்டர் தூரமுள்ள பள்ளிக்கு மாதத்திற்கு ரூபாய்.1500 கொடுப்பது  பள்ளியால் பலியாகும் நம் மக்கள் வீரத்திற்கு எடுத்துக்காட்டு.

நன்கொடை, பருவக் கட்டணம், பேருந்து கட்டணம், புத்தகம் மற்றும் சீருடைக் கட்டணம் மற்றும் தையல் கட்டணம் வெளியில் தைத்தால் உடம்பில் நிற்காதா?, அவர்கள் பள்ளி ஆண்டு விழாக் கொண்டாட்டக்  கட்டணம் (இவர்கள் பள்ளி நடத்துவது ஊருக்கே தெரிய வேண்டுமாம்) என்று நம்மை ஏழையாக்கும்   ஏராளமான  திட்டங்களை பள்ளிகள் வைத்திருக்கின்றன. காலுக்கு போடும் ஷூ கூட இவர்கள் மொத்த விலைக்கு வாங்கி  மாணவர்களிடம் விற்பனை செய்து வருகிறார்கள். அதிலும் ஆண்டு விழாவிற்கு குழந்தைகள் போட்டு வரும் அரை மணி நேர  உடைக்கென ரூ. இரண்டாயிரம் வாங்கி, அன்றுடன் அந்த வருடத்திற்கான "மொய்க் கணக்கு" முடிக்கப்படும்.

தனியார் பள்ளிகள் 10, மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு 9, மற்றும் 11 ஆம் வகுப்பில் இருந்தே பாடம் நடத்துவதாக மக்கள் கருத்துள்ளது. 11 ஆம் வகுப்பு கோடை விடுமுறையில் கூட 12 ஆம் வகுப்பிற்கு தயார் செய்வதாகவும் மக்கள் கருத்தாக உள்ளதை அரசு அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுத்தால், உண்மையான தேர்ச்சி தெரிந்து விடும். அரசுப்பள்ளிகளின் தரம் மேம்படுத்தப்பட்டால் தனியார் பள்ளிகளின் பண வெறி அடங்கும். கழிப்பறை பார்க்காத மாணவர்களும், தரமான தண்ணீர் கொடுக்காத பள்ளிகளும் பெற்றோரை பயமுறுத்தி தனியாருக்கு பணத்தை தாரை வார்க்க வைக்கின்றது.

அரசு அதிகாரிகள் தனியார் பண முதலைகளை வளர்க்க அரசுப் பள்ளியின் தரத்தை மேம்படுத்தாமல் இருக்கிறார்களா என்ற சந்தேகமும் மக்களுக்கு உள்ளது. எப்படி தனியார் பேருந்து, அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல, அரசு பேருந்து மெதுவாகச் சென்று அடுத்த முறை அரசுப் பேருந்தை மறக்க வைக்குமோ,  அது போல அதற்கு நம்மிடம் நிறைய ஆதாரங்கள் உண்டு அரசுப்பள்ளியின் தரத்தை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்பது பொதுவான கருத்து.



அடிப்படை வசதிகளான தடை இல்லாத மின்சாரம், மின் விசிறி, சுத்தமான குடிநீர், நல்ல கழிப்பறை, சுத்தமான சுற்றுப்புறம், சுகாதாரமான பள்ளிக்கூடம் இவை எல்லாம்  அரசு செய்து கொடுத்தால்  மக்கள் ஏன் தனியார் பள்ளிக்கு சென்று 'பணத்தைப் பலி' கொடுக்கும் நிலைக்கு ஆளாக வேண்டும்?

அரசு பள்ளி ஆசிரியர்களை மேம்படுத்தியும், தரமற்ற ஆசிரியர்களை வீட்டுக்கு உடனடியாக அனுப்பி திறமையான ஆசிரியர்களை நியமிப்பதும் வருங்கால அரசு பள்ளியின் நீண்ட ஆயுளுக்கு நல்லது.

கல்வி, மருத்துவம் இரண்டையும் இலவசமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இவை எல்லாம் நாங்கள் தருகிறோம் என கூறிய பள்ளியால் தான் தற்போது கள்ளக்குறிச்சி சம்பவம் இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி பத்து வருடங்களில் நடத்திய போராட்டம் சாட்சியாக உள்ளது. அப்போது ஆண்டவர்கள் கண்டும் காணாமல் இருந்ததால் தான் தற்போது மாணவி  இறந்த நிகழ்வு. மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அனைத்துக் காயங்களும் அவர் இறப்பதற்கு முன்பே ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மூக்கு, வலது தோள், வலது கை, வயிறு, வயிற்றின் மேல்பகுதி ஆகிய இடங்களில் காயங்கள் இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. எலும்பு முறிவு, ரத்தச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் அவரின் மேலாடை, கால் சட்டை, மேல் மற்றும் கீழ் உள்ளாடை இரண்டிலும் ரத்த கறை இருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆகவே இரண்டாம் முறையாக பிரேதம் பரிசோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


இது போதாதென்று எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல 

.சிபிஎஸ்சி உள்ளிட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கூட்டமைப்பு - சங்கங்கள் சார்பில், 'தனியார் பள்ளிகள் இயங்காது' என்று  அறிக்கை கொடுத்துள்ளளர்.  அறிக்கை,  வேற லெவலில் செல்கிறது காரணம் இவர்கள் ஊழல் பெருச்சாளிகள் "(18.07.2022) முதல் தனியார் பள்ளிகள் இயங்காதெனவும் காலை, காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தனியார் பள்ளிகளுக்குப் பாதுகாப்பு கேட்டு அவர்கள்  மனு கொடுக்கப் போவதாக வந்த தகவல் மக்களை மேலும் கொதிப்படையச் செய்த நிலையில் தனியார் பள்ளிகள் நாடு முழுவதும்  இயங்காது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சமூக விரோத கும்பல்தான் உட்புகுந்து வன்முறையில் இறங்கியுள்ளது.  மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், ஊழியர்கள் பாதுகாப்பு இதனால் கேள்விக்குறி ஆகியுள்ளது. பள்ளி மீது முன்னரே (!) இருந்த (அதுவே உண்மை) காழ்ப்புணர்வு காரணமாகத்தான்  தாக்குதல் நடந்துள்ளது, காவல்துறை மீதும் அதனால் தான் தாக்குதல் நடத்தியுள்ளனர், பேருந்துகளையும் எரித்துள்ளனர்" - என்று அந்த அறிக்கை பெரிதாகப் போகிறது. பள்ளிக்கும்,  தீவைப்பு போராட்டக் காரர்களுக்கும்,  எந்த வகையில் முன்விரோதம் இருந்தது என்பதை காவல் துறையினரிடம் சங்கத் தலைவர்கள் விளக்கிச் சொல்லலாம். காவல்துறையினரின் புலன் விசாரணைக்குப் பின்னர் தெரிய வேண்டிய பல விஷயங்கள், சங்கத் தலைவர்களுக்கு முன்னரே  தெரிந்திருப்பது வியப்பளிக்கிறது. இன்னொரு சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், (அறிக்கை- 2) 'தனியார் பள்ளிகளை பாதுகாக்க தொடர் உண்ணாவிரதம், தொடர் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்' - என்று கூறியுள்ளனர்.   கலவரம் நிகழ்வதற்குக் காரணமாக இருந்தவர்கள்  என்ற அடிப்படையில் 70 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர் - வழக்கு ஒரே நாளில் சிபிசிஐடி க்கு வழக்கு மாற்றமாகிப் போயுள்ளது.  பள்ளி நிர்வாகம் மீதும் வழக்குப் பதியப் பட்டுள்ளது.  இந்நிலையில், ' தனியார் பள்ளிகள் இயங்காது என்பதும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம், வேலை நிறுத்தம் செய்வோம்' என்பதும்  எந்த மாதிரி அறிக்கை - யாருக்கு எச்சரிக்கை ?  தமிழ்நாடு அரசு இதுபோன்ற எச்சரிக்கைகளை அனுமதிக்கவே கூடாது !  என மக்கள் விரும்பும் செயல் நியாயம் உண்டு நல்வாய்ப்பாக, மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குநரகம், 'முன் அனுமதி இன்றி பள்ளிகளை மூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கை செய்துள்ளது, நம்பிக்கை அளித்தது.  தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு - சங்கத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொ.மகேஷ்  தெரிவித்திருக்கிறார். ஏன் இந்தப் பேச்சுவார்த்தை?  குறிப்பிட்ட இந்த விவகாரத்தில் பள்ளியின் நிலைப்பாடு என்ன, அரசாங்கத்தைக் கேட்டு விட்டா பள்ளியின் தரப்பில் முடிவுகளை எடுத்தனர்,    பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் இதற்கு முன்னர் கலந்தாய்வு செய்தனரா, இந்த விஷயத்தில்  அரசாங்கத்தின் மீது என்ன தவறு இருக்கிறது?   தனியார் பள்ளிகள் மூடப்படும்' என்ற அறிவிப்பை அமைச்சரிடம் சொல்லிவிட்டா  அறிவித்தனர்?  கள்ளக்குறிச்சியில் பள்ளி மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையும் - சொத்துகளை திருடும்  செயலும் ஒருபோதும் ஏற்புடையதல்ல. அரசாங்கமும் சும்மா இருக்கப் போவதில்லை. கொளுத்தப்பட்டிருக்கும் சக்தி மெட்ரிக் பள்ளியின் சொத்துகளை பைக்கில், சைக்கிளில் மற்றும்  தலையில் வைத்து பலர் தூக்கிச் செல்லும் காட்சிகள் யாராலும்  ஏற்க முடியாதது! வன்முறையை பயன்படுத்தி சொத்துகளை களவாடும் கும்பலில் ஒருவரைக் கூட காவல்துறை விடாது- பள்ளிக்கான இழப்பை கலவர நபர்கள் சொத்திலிருந்தே வசூலித்துக் கொடுக்க வேண்டும்.  மிக முக்கியம் - சக்தி மெட்ரிக் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வந்த நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவர்களின் கல்விக்கான மாற்று ஏற்பாட்டை பள்ளிக்கல்வித்துறை விரைந்து செய்து கொடுக்க வேண்டும். பிள்ளைகளை வருவாயாகப் பார்க்கும் உண்டு உறைவிடப் பள்ளியில் அதிகம் தனியார் பள்ளிகள்.

இதோ பள்ளிகளை மூடுவோம் என்கிறார்கள். இனி எப்படி கிராமப்புறங்களில் புதிய பள்ளிகள் திறப்போம் என்கிறார்கள்.

விலை உயர்ந்த கட்டணத்தில் கொழுத்த தனியார்களை வளர்த்து விட்டது யார்?

அனைத்திற்கும் உரிமை கோரும் தனியார் பள்ளிகளின் இந்த அகோர மிரட்டலுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.

கல்வியை அரசு மட்டுமே வழங்க வேண்டும். இலவசமாக. இந்த சூழல் ஒரு பெரும் அறிகுறி. 

கல்வியை தனியார்மயம் பேரழிவிலிருந்து காப்பாற்றுவோம்.

அரசு இலவச கல்விக்கு தொடர்ந்து பாடுபடுவோம் என மக்கள் மத்தியில் தற்போது பெரும் விவாதப் பொருள் உருவாகியுள்ள சூழ்நிலையில் விசாரணை தேவையில்லை என்றீர்கள் -  சிபிசிஐடி விசாரணை போய்க் கொண்டிருக்கிறது!  வேறென்ன ?

அரசின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல்,  'பள்ளிக்கு விடுமுறை' என்று பல தனியார் பள்ளிகள்,  மாணவர்களுக்கு நேற்று காலையிலிருந்தே தகவல் அனுப்பிக் கொண்டிருக்கிறது.  அரசாங்கப் பள்ளிகளை அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும் ஒருபோதும் தத்தெடுப்பதில்லை...   தனியார் பள்ளிகளை காலம் கனியும் போது 'பெற்று'க் கொள்கிறார்கள். பெரும்பாலான தனியார் பள்ளிகளின் பின்புலம், அரசியல் - அதிகாரம் என்ற இரும்புப்போர்வையில் மூடப்பட்டுள்ளது. கல்விக் கட்டணமாகட்டும், வேறெந்த விவகாரமாக இருக்கட்டும்,  தனியார் பள்ளிகளின் குறிப்பாய், சிபிஎஸ்ஐ - மெட்ரிக் பள்ளிகளின் ஸ்டைலே வேறு !  நாங்கள் அவ்வளவு வேண்டுகோள் விடுத்தும், ஏன் மாணவர்களுக்கு இப்படியொரு தகவல் அனுப்பினீர்கள் என்று மெட்ரிக் பள்ளி இயக்குனர் தான் கட்டாயமாய் கேட்கவேண்டும் கல்வி அமைச்சர் பேச்சு வார்த்தைக்குப் போகிறீர்கள்? நமது அமைச்சர் தான் மக்கள் விடுக்கும் வினாவுக்கு விடை கூற வேண்டும். இச் சூழலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகில் உள்ள கனியாமூர் தனியார் நடத்தும் சக்தி இண்டர்நேஷனல் உண்டி உறைவிடப் பள்ளியின் விடுதியில் பணம் கட்டி தங்கி, பிளஸ் 2 பயின்று வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கடந்த 13.02.2022 ஆம் தேதி மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தப் பள்ளியில் இதேபோன்று மாணவிகள் தற்கொலை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை கருத்தில் கொண்டு காவல்துறை உறுதியான நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும். மாணவிகளுக்கு பாதுகாப்பாற்ற பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பத்தாண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. அவ்வப்போது பள்ளியின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டிருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது.உயிரிழந்த மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் மாணவி சாவில் ஆழ்ந்த சந்தேகங்கள் ஏற்பட்டு, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண அரசு தரப்பினர் முயன்ற நிலையில் பொதுமக்களை ஆத்திரமூட்டியது எது என்பது குறித்தும் அரசு விசாரித்து வெளிப்படுத்த வேண்டும். தொடர்ந்து சந்தேக மரணங்கள் ஏற்படும் பள்ளியை அரசு இன்னும் கூடுதல் எச்சரிக்கையோடு அணுகியிருக்க வேண்டும்.இப்போது ஆத்திரமூட்டப்பட்ட மக்களால் ஏற்பட்ட நிகழ்வை, வன்முறை மற்றும் கலகமாக சித்தரிப்பதும், பொது மக்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்குகளை பதிவுசெய்து, எல்லையற்று கைது செய்து வருவதும் சட்டம் - ஒழுங்கு அமைதிக்கு வலு சேர்க்காது. மாணவியின் சாவு குறித்த சம்பவம் குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் அந்தத் தனியார் பள்ளியை அரசு ஏற்பது மாணவர்கள் பாதுகாப்புக்கும், கல்வி மேம்பாட்டிற்கும் அவசியமாகும். இது தொடர்பாக தனியார் பள்ளி அமைப்புகளின் மிரட்டலுக்கு அரசு இடம் தரக்கூடாது. குற்றச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு எதிர்காலத்தில் குற்றச் சம்பவம் நிகழாமல் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.'' என முத்தரசன் தெரிவித்துள்ளார்.   இந்நிலையில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார்( வயது 48), பள்ளியின் செயலாளரும், தாளாளரின் மனைவியுமான சாந்தி ( வயது 44), பள்ளி முதல்வர் சிவசங்கரன்( வயது 57), வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா(வயது 40), கணித ஆசிரியை கீர்த்திகா( வயது 28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி (வயது 17) மைனர் பெண் சந்தேகமாக உயிரிழந்தது தொடர்பாக சின்ன சேலம் காவல் நிலையத்தில் ஸ்ரீமதியின் தாயார் அளித்தப் புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலவரத்தைத் தொடர்ந்து சின்னசேலம் வட்டத்துக்குப்பட்ட 2 குறுவட்டங்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த தடையுத்தரவு ஜூலை மாதம் 31-ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்ய பிறப்பித்த ஆணையை நிறுத்தி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. தாங்கள் குறிப்பிடும் மருத்துவ நிபுணரை நியமிக்கும் வரை மறு உடற்கூறாய்வை நிறுத்தி வைக்க மாணவியின் தந்தை கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை கேட்ட நீதிபதி சதீஷ்குமார் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.கள்ளக்குறிச்சி கலவரத்தில் கைது செய்யப்பட்ட 108 பேரையும் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தில் ஈடுப்பட்டதாக காவல்துறை சார்பில் 108 பேர் கைது செய்யப்பட்டனர். இதுல் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் 108 பேரை கொட்டும் மழையிலும் நீதிமன்ற நடுவர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 128 பேரில் 20 பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களை விழுப்புரத்தில் செஞ்சி பகுதியில் அமைந்துள்ள கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். குறிப்பாக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திலிருந்து அழைத்துவரப்பட்ட 108 பேரையும் கள்ளக்குறிச்சி இரண்டாம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.


இதை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்ட 108 பேரையும் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி வரை திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்து வந்த ஸ்ரீதர் மாற்றம் செய்து. புதிய ஆட்சித் தலைவராக ஷரவண்குமார் ஜதாவத் நியமனம்.கள்ளக்குறிச்சி  மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த செல்வக்குமார் மாற்றம் செய்யப்பட்டு புதிய மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக பகலவன் நியமனம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு