அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்த தலைவரும்; தேசிய செயலாளரும், மத்திய தலைமை செயற்குழு உறுப்பினர் டாக்டர் G.H. பெர்னாண்டஸ் இதய அறுவை சிகிச்சை முடிந்து உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் காலமானார்
டாக்டர் G.H. பெர்னாண்டஸ் அவர்கள் தீவிர நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தொண்டர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் மீது அளவு கடந்த மரியாதை கொண்டவர்,
அவர் மாணவர் அணியின் பொதுச் செயலாளராக நீண்ட நாள் திறம்படப் பணியாற்றியவர், மகாராஷ்டிரா மாநில கமிட்டி நீண்ட கால தலைவராகப் பணியாற்றியவர், மக்கள் நல பிரச்சனைகளுக்காகவும் நாட்டில் ஏற்படுகின்ற அநீதிகளுக்காகவும் தொடர்ந்து மக்களுக்காக போராடியவர். அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் இயக்கத்தின் வளர்ச்சிக்காக தனது வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்டவர். அவருடைய இழப்பு அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் பேரியக்கத்திற்கு மாபெரும் இழப்பாகும், அவரை இழந்து வாடுகின்ற அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் அக்கட்சியின் சார்பில் தெரிவித்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டாக்டர் G.H. பெர்னாண்டஸ் அவர்களுக்கு அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் தமிழ் மாநில குழுவின் சார்பிலும் வீரவணக்கத்தைச் செலுத்தினர்
கருத்துகள்