இரண்டிடங்களில் பதிவான வழக்கில் ஒன்றை ரத்து செய்ய, 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற காவல்துறை ஆய்வாளர் கைது.
மதுரை மாவட்டம், மேலுார் வட்டம் கருக்காலங்குடி ஹக்கீம், (வயது 40). இவர் மீது நிலப் பிரச்சனை தொடர்பாக, மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.இது தொடர்பாக மற்றும் ஒரு வழக்கு, சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு (இது தற்போது நிலமோசடி குறித்து விசாரிக்கும்) இந்த நிலையில் அங்கு வழக்குப் பதிவு செய்யப் பட்டது.நடைபெற்றதாகக் கூறப்படும்
ஒரே குற்றத்திற்கு இரு வேறு இடங்களில் வழக்குப் பதிவு செய்ய முடியாது. அப்படிச் செய்திருந்தால், ஏதாவது ஒரிடத்தில் பதிவான வழக்கை ரத்து செய்ய வேண்டும். சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவில் பதிவான வழக்கை ரத்து செய்ய, அங்கு உள்ள காவல்துறை ஆய்வாளர் ராமகிருஷ்ணனை பாதிக்கப்பட்ட ஹக்கீம் அணுகினார். அப்போது காவல்துறை ஆய்வாளர், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்கக் கேட்டுள்ளார்.
கொடுக்க விரும்பாத ஹக்கீம், அது குறித்து சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அவர்கள் கொடுத்த பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய புகார்தாரர் கொண்டு வந்த 20 ஆயிரம் ரூபாயை, சிவகங்கை ஆயுதப்படை வளாகத்திலுள்ள மாவட்டக் குற்றப்பிரிவுக் காவல்துறை அலுவலகத்தில் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் பெற்ற போது, கையுடன் சிக்கினார். அவரை, ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் காவலர்கள் கைது செய்தனர்.அரசு தரப்பில் சாட்சி உடன் சென்று லஞ்சம் கொடுத்த நிலையில் அதை ஆய்வாளர் வாங்கிய போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன், ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆய்வாளர்கள் கண்ணன் மற்றும் ஜேசுதாஸ், சார்பு ஆய்வாளர் ராஜா முகமது ஆகியோர் இலஞ்சம் வாங்கிய ஆய்வாளர் ராமகிருஷ்ணனை கையுடன் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணையும் நடத்தினார்கள்.
கருத்துகள்