2022-ஆம் ஆண்டு சுதந்திர தினம் கவுரவ விருதுகள்
2022 சுதந்திர தினத்தையொட்டி, வீரச்செயல்களுக்கான விருதுகளைத் தொடர்ந்து, ராணுவ பணியாளர்களுக்கான விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கீர்த்தி சக்ரா விருது ஒருவருக்கும், சவுர்ய சக்ரா விருது 8 பேருக்கும் வழங்கப்படுகிறது.சுதந்திர தினத்தை முன்னிட்டு 1,082 காவல் பணியாளர்களுக்கு பதக்கங்கள் அறிவிப்பு தமிழகத்தைச் சேர்ந்த 27 பேர் பதக்கங்களுக்கு தேர்வு
சுதந்திரதினத்தையொட்டி மொத்தம் 1,082 காவல் பணியாளர்களுக்கு காவல்துறை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் வீரச்செயலுக்கான காவல் பதக்கங்கள் 347 பேருக்கு வழங்கப்படுகின்றன. மிகவும் சிறப்புமிக்க குறிப்பிடத்தக்க சேவைக்கான குடியரசு தலைவரின் காவல்துறை பதக்கம் 87 பேருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த சேவைக்கான காவல் பதக்கம் 648 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
347 வீரச்செயல் விருதுகளில் பெரும்பாலானவை ஜம்மு & காஷ்மீரில் துணிச்சலான செயல்களுக்காக 204 பணியாளர்களுக்கும், இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணிச்சலான செயல்பாட்டிற்காக 80 பணியாளர்களுக்கும், வடகிழக்கு பிராந்தியத்தில் துணிச்சலான செயல்களுக்காக 14 பணியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. தீரச்செயல் விருதுகளைப் பெற்றவர்களில், 109 பேர் சிஆர்பிஎஃப், 108 பேர் ஜே & கே காவல்துறை, 19 பேர் பிஎஸ்எஃப், 42 பேர் மகாராஷ்டிரா, 15 பேர் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்கள், மீதமுள்ளவர்கள் மற்ற மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.
மிகவும் சிறப்புமிக்க சேவைக்கான குடியரசு தலைவரின் பதக்கங்களை தமிழகத்தைச் சேர்ந்த 3 காவல்துறை அதிகாரிகள் பெறுகின்றனர். சிறந்த சேவைக்கான காவல் பதக்கங்களுக்கு தமிழக காவல்துறையைச் சேர்ந்த 24 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சிறைத் துறையினருக்கான திருத்த சேவை விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் தேர்வு
2022, சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறுத்துறையினருக்கான திருத்த சேவை பதக்கங்கள் பெறுவோரின் பட்டியலுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட மொத்தம் 45 பேருக்கு சிறப்பாக பணியாற்றியது, போற்றத்தக்க வகையில் பணியாற்றியதற்கான திருத்த சேவை விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தின் உதவி சிறைகாவலர் திரு டி. ஜவஹர் மற்றும் கிரேட் 1 வார்டர் திரு ஆர். சங்கரராமேஸ்வரன் ஆகியோர் தகுதிமிக்க சேவையாற்றியதற்கான சீர்திருத்த சேவைப் பதக்கம் பெற உள்ளனர்.தமிழக தீயணைப்பு துறை வீரர்கள் உட்பட ஊர்க்காவல் படை மற்றும் உள்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று தீயணைப்புத் துறை, உள்நாட்டு பாதுகாப்பு படை, ஊர்காவல் படை ஆகியவற்றில் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கும் சிறப்பாகவும் பாராட்டக்கூடிய வகையில் பணியாற்றியவர்களுக்கும் குடியரசுத் தலைவர் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
2022, சுதந்திர தினத்தை முன்னிட்டு தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 55 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த திரு ஆறுமுகம் ராமச்சந்திரன், போக்குவரத்து நிலைய அதிகாரி; திரு கூத்தன் பஞ்சவர்ணம், தீயணைப்பு வீரர்; திரு பரமசிவம் கந்தசாமி, தீயணைப்பு வாகன ஓட்டுநர்; திரு ரங்கராஜன் ராமச்சந்திரன், தீயணைப்பு வீரர் ஆகியோருக்கு பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இவர்களுள் 6 வீரர்களுக்கு சிறப்பு சேவை விருதுகளும், 38 பேருக்கு போற்றத்தக்க வகையில் செயல்பட்டதற்காக குடியரசுத் தலைவரின் தீயணைப்புத்துறை பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
இது தவிர சுதந்திர தினத்தின் போது உள்நாட்டு படை மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 46 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இவர்களில் 2 பேருக்கு வீர தீர செயல்களுக்கான விருது வழங்கப்படுகிறது.
ஊர்க்காவல் படையினர் மற்றும் உள்நாட்டு படையினருக்கான குடியரசுத் தலைவரின் பதக்கமும் சிறந்த சேவைக்கான பழக்கமும் முறையே 7 மற்றும் 37 பேருக்கு வழங்கப்படுகிறது. இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த திரு ஜேக்கப் விட்டோ பிளாக்கா, ஏரியா கமாண்டர் (ஊர்க்காவல் படை) மற்றும் திரு ராதா ரமணன் சங்கர் ராஜ், பிளாட்டூன் கமாண்டர் (ஊர்க்காவல் படை) ஆகியோருக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்படுகிறதுபாதுகாப்பு அமைச்சகம்
ராணுவ துணைதளபதி பாராட்டு அட்டை விருதாளர்களின் பட்டியல் வெளியீடு
2022 சுதந்திர தின விழாவையொட்டி, ராணுவ துணை தளபதி பாராட்டு அட்டை விருதாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இரயில்வே அமைச்சகம்
சிறப்பு மிக்க சேவைகள் மற்றும் சிறந்த சேவைக் காவல் பதக்கம் ஆர்பிஎப்/ஆர்பிஎஸ்எப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது
2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்புமிக்க சேவைகள் மற்றும் சிறந்த சேவைகளுக்கான குடியரசுத் தலைவரின் காவல் பதக்கங்கள் ரயில்வே பாதுகாப்பு படை/ ரயில்வே சிறப்பு பாதுகாப்பு படை பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 27 தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகளுக்கு செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்தியக் குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள் தமிழ்நாடு காவல்துறையைச் சார்ந்த 3 அலுவலர்களுக்கு வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவுஏடிஜிபி சங்கர், நுண்ணறிவு பிரிவு ஐஜி ஈஸ்வரமூர்த்தி, சேலம் வடக்கு நகர் டிஎஸ்பி மாடசாமி ஆகிய மூன்று பேருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், இந்தியக் குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான காவல் விருதுகள் 24 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, “ 1. நஜ்முல் ஹோடா, காவல்துறை ஆணையாளர் சேலம் மாநகரம்
2. ஜா.முத்தரசி, காவல் கண்காணிப்பாளர் II, குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை சென்னை
3. ஜி.நாகஜோதி காவல் துணை ஆணையாளர், மத்திய குற்றப்பிரிவு-I, பெருநகர காவல் சென்னை
5. டி.சண்முக பிரியா, காவல் கண்காணிப்பாளர், வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு, சென்னை
6. ஏ.மயில்வாகனன், காவல் கண்காணிப்பாளர். மேற்கு சரகம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சென்னை
7. ச.சரவணன், காவல் கண்காணிப்பாளர், தனிப் பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை சென்னை
8. பா.ராஜேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, புதுக்கோட்டை
9. கோ.வேல்முருகன். காவல் உதவி ஆணையர் இணையதள குற்றப்பிரிவு மத்திய குற்றப்பிரிவு, பெருநகர காவல் சென்னை
10. தசவரிநாதன் காவல் துணை கண்காணிப்பாளர், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் காவல் கட்டுப்பாட்டு அறை. சென்னை, 11. புருஷோத்தமன், காவல் துணை கண்காணிப்பாளர். மெட்ரோ – II குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை
12. சா.ஜெயதுரை ஜான் கென்னடி, காவல் துணை கண்காணிப்பாளர் ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு சென்னை13. ரா.தனராசு, காவல் துணை கண்காணிப்பாளர், தாராபுரம் உட்கோட்டம், திருப்பூர் மாவட்டம்
14. கே.கௌதமன், காவல் துணை கண்காணிப்பாளர், சிறப்புப் புலனாய்வு பிரிவு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை 15. தி.சரவணன், காவல் உதவி ஆணையாளர், நுண்ணறிவு பிரிவு. சேலம் மாநகரம்
16. மா.சுதேசன் காவல் ஆய்வாளர்.தக்கலை வட்டம், கன்னியாகுமரி மாவட்டம்
17. தவீரகுமார், காவல் ஆய்வாளர், சி-2 யானை கவுணி காவல் நிலையம், வடக்கு மண்டலம் பெருநகர காவல் சென்னை
18. சா.சுப்புரவேல், காவல் ஆய்வாளர், பாதுகாப்பு பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை சென்னை 19.திராபின் ஞானசிங் காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை, திருநெல்வேலி 20.மதி த சூரியகலா, காவல் ஆய்வாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை மதுரை
21. எஸ்.பவுல் பாக்கியராஜ், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 5. ஆம் அணி ஆவடி
22. க.செல்வராஜ், காவல் உதவி ஆய்வாளர். தமிழ்நாடு அதிதீவிரப்படை
23. பயிற்சி பள்ளி சென்னை
24. தா.அந்தோணி தங்கராஜ், சிறப்புக் காவல் தவி ஆய்வாளர். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை நகரம் III சென்னை” ஆகியோர் விருது பெறுகிறார்கள் .
கருத்துகள்