இளநிலை பொறியாளர் (சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல், குவாண்டிட்டி சர்வேயிங் & காண்ட்டிராக்ஸ்) தேர்வு 2022
பணியாளர் தேர்வாணையம் கடந்த 12.08.2022 அன்று இளநிலை பொறியாளர் (சிவில், மெக்கானிகல், எலக்ட்ரிகல், குவாண்டிட்டி சர்வேயிங் & காண்ட்டிராக்ஸ்) தேர்வு 2022-க்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த பணிகளுக்கான தேர்வு பொதுப் போட்டியாக நடத்தவுள்ளது. நாடு முழுவதிலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பணிக்கான விவரங்கள், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு முறை எவ்வாறு விண்ணப்பிப்பது ஆகிய விவரங்கள் ஆள் சேர்ப்பு அறிக்கையில் உள்ளன.
தேர்வாணையத்தின் ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 02.09.2022 (இரவு 11.00 மணி) கடைசி நாளாகும். இணையம் வழியாக கட்டணம் செலுத்த 03.09.2022 (இரவு 11.00 மணி) கடைசி நாளாகும்.
கணினி அடிப்படையிலான தேர்வு 2022 நவம்பரில் நடைபெறும். தென்மண்டலத்தில் ஆந்திரப்பிரதேசத்தில் 10, தமிழ்நாட்டில் 7, புதுச்சேரியில் 1, தெலங்கானாவில் 3 என மொத்தம் 21 மையங்களில் தேர்வு நடைபெறும் என்று பணியாளர் தேர்வாணையத்தின் தென்மண்டல இயக்குனர் திரு கே நாகராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்