தமிழ்நாட்டில் மிகச்சிறந்த உயர்கல்வி குறித்த மாநாடு: திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக்கழகம் நடத்தி்யது
இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டுவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாட்டில் மிகச்சிறந்த உயர்கல்வி குறித்த மாநாடு நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக்கழகம் (என்ஐடி) ஏற்பாடு செய்திருந்த இந்த மாநாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்தரமான கல்வி நிறுவனங்களை ஆளுநர் திரு ஆர் என் ரவி பாராட்டினார். தங்களின் ஒப்பற்ற அறிவுத்திறன் மற்றும் நிர்வாக தலைமைத்துவத்தால் இத்தகைய நிறுவனங்கள் மாநிலத்திற்கு பெருமையையும், கௌரவத்தையும் கொண்டு வந்திருப்பதாக அவர் கூறினார்.
தேசிய கல்விக்கழகங்களின் தரவரிசை கட்டமைப்பு 2022-ல் என்ஐடி திருச்சிராப்பள்ளியைத் தொடர்ந்து 7-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. பொறியியல் பிரிவில் சென்ற ஆண்டு இருந்த 66.08 என்ற ஸ்கோர் இந்த ஆண்டு 69.17 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கான பட்டயத்தை ஆளுநர் திரு ஆர் என் ரவி இந்த கல்விக்கழகத்தின் இயக்குனர் பேராசிரியர் ஜி அகிலாவிடம் வழங்கினார். இதற்கு பின் உரையாற்றிய பேராசிரியர் அகிலா, என்ஐடி திருச்சி மேற்கொள்ளும் செயல்பாட்டு உத்திகள் நடைமுறை ஆகியவை பற்றி எடுத்துரைத்தார். சிறந்த கல்விமுறைக்கான திட்டமிடலில் கவனம் செலுத்தப்படுவது பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து மத்திய மற்றும் மாநில நிதியுதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றனர்
கருத்துகள்