பிரதமரின் தொலைத்தகவல் தொடர்பு சீர்திருத்தங்களுக்கு தொலைத்தகவல் தொடர்பு தொழில்துறையின் ஆதரவாக 5ஜி அலைக்கற்றை ஏலம் ரூ. 1,50,173 கோடியை எட்டியுள்ளது
72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை அரசு ஏலம்விட்டது. இதில் 51.236 மெகாஹெர்ட்ஸ் (மொத்தத்தில் இது 71%) ரூ. 1,50,173 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது.
அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் 400 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது. பார்த்தி ஏர்டெல் லிமிடெட் நிறுவனம் 19,867.8 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் 24,740 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது. வோடபோன் ஐடியா லிமிடெட் 6,228 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.
மொத்த ஏலத்தொகையான ரூ.1,50,173 கோடியில் அதானி டேட்டா நெட்ஒர்க்சின் ஏலத்தொகை ரூ.212 கோடி, பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.43,048 கோடி, ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமின் ஏலத்தொகை ரூ.88,078 கோடி வோடப்போன் ஐடியா நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.18,799 கோடி ஆகும். அனைத்து பங்கேற்பாளர்களால் வழங்கப்படவுள்ள வருடாந்திர தவணைத்தொகை ரூ.13,365 கோடி.
கருத்துகள்