சுதந்திரம் அடைந்தது முதல் அகில இந்திய வானொலி உடனான நினைவுகளும் அற்புத தருணங்களும்
15 ஆகஸ்ட் முதல் தினந்தோறும், தனது பிரதான செய்தி அறிக்கைகளில் அகில இந்திய வானொலி ஒலிபரப்ப உள்ளது
“சுதந்திர இந்தியாவின் குரல் – அகில இந்திய வானொலியுடன்” –இந்தியாவின் கடந்த 75 ஆண்டு கால பயணத்தை நினைவுகூர்தல்
அகில இந்திய வானொலி. செய்திகள் வாசிப்பது ….. நாடு சுதந்திரம் பெற்றது முதல் கடந்த 75 ஆண்டுகளாக, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை ஒலிபரப்பு நிறுவனம், நாடு முழுவதும் உள்ள 130கோடி மக்களுக்கு பழமொழி கதை சொல்லும் நிறுவனமாக செயல்படுகிறது.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை, அகில இந்திய வானொலி, “சுதந்திர இந்தியாவின் குரல் – அகில இந்திய வானொலியுடன்” என்ற தலைப்பிலான தனித்துவ நிகழ்ச்சியுடன் கொண்டாட உள்ளது. இந்த நிகழ்ச்சி, 15 ஆகஸ்ட் 2022 முதல், 100.1 எப்எம் பண்பலை அலைவரிசையில், அதன் பிரதான செய்தி அறிக்கைகளில் 90 வினாடிகளுக்கு ஒலிபரப்பாகவுள்ளது. இதனை, அகில இந்திய வானொலியின் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் கேட்கலாம். தேசத்தின் குரலான அகில இந்திய வானொலி, கதை சொல்லுதல் முறையில் சுதந்திர இந்தியாவின் வாழ்க்கைப் பயணம் பற்றிய பல்வேறு அம்சங்களையும் எடுத்துரைப்பதாக இந்நிகழ்ச்சி இருக்கும்.
சுதந்திர நாடாக உருவாணது முதல், வல்லரசாக உருவெடுத்திருப்பது வரையிலான நவீன இந்தியாவின் வரலாற்றை, அகில இந்திய வானொலி, செய்தித்துளிகள் மற்றும் இசைத் தொகுப்பு மூலம் நினைவுகூற உள்ளது. இந்த நிகழ்ச்சி, மகாத்மா காந்தி, ஹோமி ஜஹாங்கிர் பாபா, சர் சி.வி.ராமன், டாக்டர் குரியன் வர்கீஸ், டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன், பண்டிட் பீம்சென் ஜோசி, மெல்வின் டி மெல்லோ, ஜஸ்தேவ் சிங் உள்ளிட்ட மாமனிதர்களின் குரல்களை ஒலிப்பதாக இருக்கும். இன்ஸ்டாகிராம், ட்விட்டர், முகநூல் மற்றும் யூ டியூப் ஆகிய அகில இந்திய வானொலியின் சமூக ஊடகங்களில் தினந்தோறும் ஒரு சிறப்புக் கட்டுரை ஒலிபரப்பப்பட்டு, பதிவேற்றம் செய்யப்படும். இதனை, @AkashvaniAir & ட்விட்டரில் @airnewsalerts, newsonairofficial யூ டியூப் அலைவரிசை, newsonair.gov.in இணையதளம், நியூஸ்ஆன்ஏர் செயலி, முகநூல், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் கேட்கலாம்.
அகில இந்திய வானொலி 8 ஜுன் 1936 அன்று தொடங்கப்பட்டது முதல், நாட்டின் முதலாவது சுதந்திர தினமான 1947ம் ஆண்டு முதல் பங்களாதேஷ் விடுதலை முதல் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வரலாறு படைத்தது முதலான பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் சாட்சியமாக திகழ்கிறது.
நாடு முழுவதும் உள்ள 479 வானொலி நிலையங்கள் வாயிலாக, 23 மொழிகள், 179 பேச்சு வழக்கு (dialect)களில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருவதன் வாயிலாக, உலகின் மிகப்பெரிய ஒலிபரப்பு நிறுவனமாக அகில இந்திய வானொலி திகழ்கிறது. இது, நாட்டின் நிலப்பரப்பில் 92 சதவீத அளவிற்கும், மொத்த மக்கள் தொகையில் 99.19 சதவீதத்தினரையும் சென்றடைகிறது. ‘பலரது மகிழ்ச்சி: பலரது நலன்‘ அதன் குறிக்கோள் ஆகும்.
நேயர்கள், தாங்கள் கடந்து வந்த காலகட்டத்தை நினைவுகூற ஆயத்தமாக இருப்பதோடு, அகில இந்திய வானொலியின் சமூக ஊடகங்களை பின் தொடருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கருத்துகள்