தமிழ்நாடு காவல்துறையில் 76 துணைக் கண்காணிப்பாளர்களை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவு.
ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 36 ஆயிரம் ரூபாய் வட்டி கிடைக்குமென்று அறிவித்த நிலையில், முதலீடு செய்ய வாடிக்கையாளர்கள் குவிந்தனர் அதனால் இந்த நிறுவனம் மீது சந்தேகமடைந்த பொருளாதாரக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த வழக்கை வழக்கை விசாரித்த 3 துணைக் கண்காணிப்பாளர்கள் பணியில் விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்
அந்த மூவரும் கண்ணன் மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல்படை உதவி கமாண்டண்ட் ஆகவும், சம்பத் இராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவிற்கும், சுரேஷ் இராமநாதபுரம் சரகர் காவல்துறை பயிற்சி மையத்திற்கும் மாற்றப்பட்டனர்,
தாம்பரம் காவல் ஆணையராக இருந்த ரவி ஓய்வு பெற்றதால் ஆவடி காவல் ஆணையரே கூடுதல் பொறுப்பாக தாம்பரம் சரகத்தையும் கவனித்து கண்காணித்த நிலையில் தற்போது மத்தியக் குற்றப்பிரிவு உதவி ஆணையராக சுந்தரம் நியமிக்கப்பட்டார். சென்னை மத்தியக் குற்றப்பிரிவு உதவி ஆணையராக ரித்து நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்ட 76 டிஎஸ்பி.,க்களில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர் அதிகமென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்