தமிழகத்தின் மக்கள் எதிர்கொள்ளும் மற்றோரு அபாயம்.
மோசடி நிதி நிறுவனங்கள் பற்றி பல மாதங்களாகவே பல எச்சரிக்கைகள்.
தமிழகத்தின் வட மாவட்டங்களில் மூன்று மோசடி நிறுவனங்கள் சுருட்டிய தொகை மட்டும், பல்லாயிரம் கோடி ரூபாய்.
பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை சொல்லும் தொகையே பத்தாயிரம் கோடி என்றால், கள நிலவரம் இதைவிட பல மடங்கு அதிகமாகும் என்த் தோன்றுகிறது.
தங்களுடைய பெரிய அளவு சேமிப்புகளை முதலீடு செய்து ஏமாந்து போயிருக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை பற்றி அறிந்தால் தலை சுற்றும்
கிராமப்புறங்கள், நகர்ப்புறங்கள் என வித்தியாசம் இல்லாமல் பல பேர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசம் போயுள்ளனர்.
கூலித் தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வர்த்தகம் செய்யும் நபர்கள் வரை மோசடி நிறுவனங்களுக்கு இரையாகின்றனர்.
சில்லறை வியாபாரிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த வட்டியில் வசூலித்து வந்தவர்கள் கூட கொடுப்பதை நிறுத்திக் கொண்டு மொத்தமாக இந்த நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்து போயிருக்கிறார்கள்.
இதனால் சிறிய மற்றும் நடுத்தர வியாபார வர்க்கமே ஒட்டுமொத்தமாய் கடுமையான பொருளாதார சிக்கலில் தற்போது மாட்டிக் கொண்டுள்ளது.
தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஒரு அவசரத்திற்கு பணம் புரட்ட முடியாத நிலையை கண்கூடாகவே பார்க்க முடிகிறதோடு மற்றவர்கள் கேள்விப்பட முடிகிறது.
பலரும் புலம்புவதைப் பார்த்தால் இவர்கள் எப்படி இதிலிருந்து மீண்டு வரப் போகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி..மோசடி நிறுவனங்களை துவக்கத்திலேயே அடையாளம் கண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையாவது பொருளாதாரக் குற்றப்பிரிவு செய்திருக்க வேண்டும்.
அதுதான் அவற்றின் முதன்மைக் கடமையும் கூட. ஆனால் அந்தக் கடமையை செய்வதில் காவல்துறை தோற்றுவிட்டது என்று தான் கூறவேண்டும் வேலூரைத் தலைமையிடமாகக் கொண்டு 'இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ்' என்ற நிறுவனம் இதன் உரிமையாளர்களாக லட்சுமி நாராயணன், வேதநாராயணன் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோர் இணைந்து நடத்தினர். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 8,000 ரூபாய் தருவதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களிடம் கோடிக்கணக்கான ரூபாயை இந்நிறுவனம் வசூல் செய்துள்ளது. அவ்வாறு வசூல் செய்யும் நபர்களிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு இரண்டு விழுக்காடு வட்டிக்கு கடன் வாங்குவதாக ஒப்பந்தம் செய்துகொண்டது தெரியவந்துள்ளது.
இவ்வாறு வசூல் செய்த பணத்தை பங்கு வர்த்தகத்தின் முதலீடு செய்து அதிக லாபம் பார்ப்பதாகவும், அந்த லாபத்தில் முதலீட்டாளர்களுக்கு பங்கு தருவதாகவும் கோடிக்கணக்கான ரூபாய் வசூல் செய்தனர்.பல்வேறு வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைத்து முதலீடு செய்தவர்களிடம் பணத்தை வசூல் செய்து மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒரு லட்சம் ரூபாய்க்கு 8,000 ரூபாய் மாதமாதம் கிடைத்ததை அடுத்து பலரும் அதிகப்படியான தொகையை முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே இதேபோன்று ’ஆருத்ரா கோல்ட் டிரேடிங்’ என்ற நிறுவனம் ஒரு லட்ச ரூபாய்க்கு 30 ஆயிரம் ரூபாய் மாதம் தருவதாகக்கூறி மோசடி செய்த விவகாரத்தில் பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறையில் சோதனை நடத்தினர். சுமார் 1,400 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, இதேபோன்று மோசடியில் ஈடுபடும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்தின் மீதும் புகார்கள் எழுந்தன குறிப்பாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கிடைத்த ரகசியத்கவலின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்த பொருளாதார குற்றப்பிரிவுக்கு பரிந்துரை செய்தார். தற்போது தமிழ்நாடு முழுவதும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் நிறுவனத்திற்குத் தொடர்பான 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவுக் காவல்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சென்னை கிண்டியிலுள்ள தாமரை டெக் பார்க் கட்டடத்தில் செயல்படும் இன்டர்நேஷனல் பைனான்சியல் சர்வீஸ் கார்ப்பரேட் அலுவலகத்திலும், மயிலாப்பூர், போரூர் உள்ளிட்ட நான்கு இடங்களில் அலுவலர்கள் சோதனை நடத்தினர். இதேபோன்று வேலூர் மாவட்டம் காட்பாடியிலிருக்கும் தலைமை அலுவலகம், அரக்கோணம், நெமிலி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களிலும் தீவிர சோதனை நடந்தது. காட்பாடி வி.ஜி.ராவ் நகரிலிருக்கும் லட்சுமி நாராயணன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. முன்னதாக பணத்தை முதலீடு செய்தவர்கள் புகார் அளிப்பதை தடுப்பதற்காக வாட்ஸ் ஆப் குழு அமைத்து பலருக்கும் இன்டர்நேஷனல் பைனான்ஸ் அண்ட் சர்வீஸ் உரிமையாளர் லட்சுமி நாராயணன் ஆடியோ வெளியிட்டதும் தெரிய வந்தது.
சோதனையின் முடிவில் தமிழ்நாடு முழுவதும் எவ்வளவு பேரிடம் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது மற்றும் இந்த இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் பணம் தொடர்பான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுமென பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஆக நாராயணன்கள் கூடி ஊருக்கே இராமம் போட்ட கதை இன்னும் தொடரும்
கருத்துகள்