உலக சிங்கங்கள் தினத்தை முன்னிட்டு சிங்கங்களை பாதுகாப்பவர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் பாராட்டு
உலக சிங்க தினத்தை முன்னிட்டு சிங்கங்களை பாதுகாப்பவர்களின் முயற்சிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்துள்ள பிரதமர் தெரிவித்திருப்பதாவது;-
“உலக சிங்க தினத்தை #WorldLionDay முன்னிட்டு, கம்பீரமான சிங்கங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அனைவரையும் பாராட்டுகிறேன். பிரம்மாண்டமான ஆசிய சிங்கங்களின் துடிப்பான வசிப்பிடமாக இந்தியா எப்போதும் திகழும்.”ஆண்டு தோறும் ஆகஸ்ட் பத்தாம் தேதி உலக சிங்கங்கள் தினம். காட்டுக்கே ராஜா என உள்ள சிங்கங்கள் தற்போது அழிந்து வரும் விலங்குகள் பட்டியலில் உள்ளது
50 ஆண்டுகளுக்கு முன்பு உலகிலிருந்த சிங்களின் எண்ணிக்கை 95 சதவிதகிதம் குறைந்துவிட்டதை ஆய்வுகள் கூறுகிறது
ஆனால் அது வெளியே உலகிற்குத் தெரியவில்லை. சிங்கங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் , அவற்றின் பாதுகாப்பை நோக்கி செயல்பட வேண்டிய அவசரத் தேவையும் தான் இந்த நாளில் நோக்கம்.
மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சிங்கங்கள் அதிக எண்ணிக்கையில் இருந்த சான்றுகள் உண்டு ஆனால் இன்று நிலை அப்படி இல்லை. சுற்றுச்சூழல் மாற்றங்களின் காரணமாக சிங்கங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. 50 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் இருந்த சிங்களின் எண்ணிக்கை 95 சதவிதகிதம் குறைந்துவிட்ட நிலையில் அவைகளை மீட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அதனை வலியுறுத்தும் நாள்தான் இந்த உலக சிங்கங்கள் தினம்.
கருத்துகள்