கள்ளக்குறிச்சி அருகே உள்ள சக்தி இண்டர்நேஷனல் பள்ளியின் மாணவி ஸ்ரீமதி மர்மமாக இறந்த வழக்கில். "ஏன் இன்னும். வழக்கு எண் வழங்கப் படவில்லையென." நீதிபதி அதிரடி கேள்வி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி இண்டர்நேஷனல் உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து மாணவி ஸ்ரீமதி ஜூலை மாதம் 13 ஆம் தேதி மர்மமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா மற்றும் கணித ஆசிரியை மற்றும் ஹாஸ்டல் வார்டன் கீர்த்திகா ஆகிய ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தங்களுக்கு ஜாமின் கோரி இதற்கு முன்னர் இரண்டு முறை இந்தக் குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதனிடையே மூன்றாவது முறையாக அவர்களின் ஜாமின் மனுவும் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில் சின்னசேலம் இருந்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறையின் வசம் மாற்றப்பட்ட நிலையில் ஐவரின் ஜாமீன் மனுக்களில் ஏன் இன்னும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறை குற்ற வழக்கு எண்ணைப் பதிவு செய்யவில்லை என நீதிபதி சாந்தி கேள்வி எழுப்பினார். அப்போது குற்ற வழக்கு எண் சிபிசிஐடி காவல்துறையினரிடமிருந்து தங்களுக்கு வழங்கப்படவில்லை என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும் ஜிப்மர் மருத்துவக்குழுவின் இறப்பு ஆய்வறிக்கை வரும் வரை கால அவகாசம் வழங்க சிபிசிஐடி தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் விசாரணையை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று கள்ளக்குறிச்சி போராட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 174 நபரில் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது மற்றும் 56 பேருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகில் கனியாமூர் பள்ளிக்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 174 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்ததனர். அந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றதில் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.
174 பேர் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிபதி பூர்ணிமா 69 பேருக்கு மட்டும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். 56 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மற்றவர்களின் ஜாமீன் மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி பக்கம் நியாயக் காற்று வீசுவதாக தற்போது தெரிகிறது அதற்கு நீதிமன்றம் தான் முக்கியக் காரணம் இந்தச் சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி வீட்டில் மாணவியின் தாயாரைப் பார்த்துப் பேசி ஆறுதல் கூறிய பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்ததையடுத்து மாணவியின் தாய் செல்வியிடம் போனைக் கொடுக்கச் சொன்னார் பின்னர் முதல்வர். மாணவியின் தாயாரிடம் அலைபேசி வாயிலாகப் பேசிய முதல்வர், 'தவறு செய்தது யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். உங்களுக்கு உகந்த நேரத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் என்னைச் சந்திக்கலாம். தைரியமாக இருங்கள்' எனத் தெரிவித்தார். ஸ்ரீமதி குடும்பம் சாந்தியை இழந்தது கொலை செய்ததாக மக்கள் சந்தேகம் கொண்ட சாந்தியை சாந்தியற்றதாக ஆக்கினார் "நீதிபதி சாந்தி"
இச் சூழலில் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சார்நத பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தொழிலாளர் நலன் துறை அமைச்சர் கணேசன்,கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், நெய்வேலி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சபா.ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போதிருக்கும் சூழ்நிலையில் பள்ளிகா கல்வி துறைக்கு மக்கள் மற்றும் ஊடக்கத்தில் பாராட்டும் மற்றும் விமர்சனங்கள் இரண்டும் வந்து கொண்டுதான் உள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் தங்கள் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிக்கு நேரடியாக சென்று அடிக்கடி ஆய்வுகள் நடத்த வேண்டுமென்று தெரிவித்தார். தொடர்ந்து, பள்ளிகளில் நடத்தப்படும் ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களை சிலர் கோபத்துடன் கேள்விகள் கேட்பார்கள். அது தனிப்பட்ட பிரச்னையாகக் கருதக்கூடாது. பள்ளியின் வளர்ச்சிக்காக என்று கருத வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களை அழைத்து கற்றல் திறன் குறித்து விவாதிக்க வேண்டும். கற்றல் திறனை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டுமென்றும். பள்ளி கல்வித்துறை நல்ல பெயர் எடுத்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவத்தால் பள்ளி கல்வித்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
ஒரு பிரச்னை ஏற்பட்டால் 24 மணி நேரத்தில் என்ன நடந்தது என்று கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும். அதுமட்டுமல்லால் பிரச்னைகள் குறித்து முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுப்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும். மூன்று மாவட்டங்களிலும் பின்தங்கிய மாணவர்கள் அதிகம் உள்ள மாவட்டம் கடலூர் மாவட்டம் தான்.
அங்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும்தான் பள்ளி சிறப்பாக செயல்படுவதாக பேசப்பட்டு வரும் நிலையை மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஊதியத்திற்காக வேலை செய்யாமல், தாங்கள் இருக்கும் துறையில் கல்வியில் ஒரு மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் செயல்பட வேண்டுமென்று கூறினார்.
கருத்துகள்