முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். பாஸ்கர் வீட்டில் சிக்கிய 214 ஆவணங்கள் குறித்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு
நாமக்கல் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்கிறார். அத்துடன் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் பல நிறுவனங்களையும் நடத்தி வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக பாஸ்கர் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக
எழுந்த புகாரின் பேரில் , வருமானத்தைவிட 315 சதவீதம் அதிகமாக, அதாவது ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளதாக பாஸ்கர் மீது நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையில், நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் வீடு, அலுவலகம் மற்றும் அவரது உறவினர்கள், ஆதரவாளர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர். நாமக்கல், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்களில் ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
சேலம், நாமக்கல், தருமபுரி, மதுரை, ஈரோடு, கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் 80 பேர் தனித்தனி குழுக்களாக பிரிந்து இந்த சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு 7 மணி வரை நடந்தது. மொத்தம் 13 மணிநேரம் நடந்துள்ள சோதனையில் நாமக்கல்லில் உள்ள பாஸ்கரின் சகோதரி வீடு, முன்னாள் நகராட்சித் துணைதலைவர் சேகர், முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் மயில்சுந்தரம், ஸ்ரீதேவி எக் சென்டர் உரிமையாளர் மோகன், முன்னாள் நகராட்சிப் பொறியாளர் கமலநாதன், புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் கோபிநாத், நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பொறியாளர் கணேசன், கொண்டிசெட்டிப்பட்டி பைனான்ஸ் அதிபர் சங்கரன், நல்லிபாளையம் பைனான்ஸ் அதிபர் விஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
நேற்று ஒரே நாளில் நாமக்கல்லில் 28 இடங்கள், திருப்பூர் மற்றும் மதுரையில் தலா ஓரிடம் என மொத்தம் 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.26 லட்சத்து 52 ஆயிரத்து 660 மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தகவல் தெரிவித்து உள்ளதுடன்.
மேலும் 4 சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், கடன் பத்திரங்கள், வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இவை தவிர, 1 கிலோ 680 கிராம் தங்க நகைகள், 6 கிலோ 625 கிராம் வெள்ளிப் பொருட்கள், 20 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினிப் பதிவுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன.
மொத்தம் வழக்குக்கு தொடர்புடைய ரூ.14 லட்சத்து 96 ஆயிரத்து 900 மற்றும் 214 ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் காலை முதல் ஆய்வு செய்து வருகிறார்கள், அந்த சொத்துகள் எப்படி வாங்கப்பட்டன, அதற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள். இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் யார், யார் என்பது குறித்தும் விரிவாக ஆய்வு நடத்தி வருகறார்கள். ஆய்வு முடிந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர். இதனால் இதில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர். அடுத்ததாக:-
பட்டா மாறுதலுக்கு 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது.!
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே பட்டா மாறுதலுக்கு 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
கே.சிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் வெங்கடேச பெருமாள் என்பவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ராகவன் என்பவரிடம் பட்டா மாறுதலுக்கு 14 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து ராகவன் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத் துறை பினாப்தலின் இரசாயனம் தடவிய பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அரசு சாட்சி முன்னிலையில் அந்த பணத்தை பெறும் போது கிராம நிர்வாக அலுவலரை கையுடன் பிடித்துக் கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர். நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
அடுத்ததாக:-
அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில், 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏலாக்குறிச்சி கிராம வருவாய் ஆய்வாளர் செந்தில் குமார், சச்சினாந்தம் என்பவரிடம் பட்டா மாற்றம் செய்ய 10 ஆயிரம் பெற்றுள்ளார். இது குறித்து சச்சிதானந்தம் அரியலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் கொடுத்துள்ளார். சச்சிதானத்திடம் மேலும் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், செந்தில்குமாரை கையுடன் கைது செய்தனர். அடுத்ததாக:-
வீட்டுமனையை அளவீடு செய்ய ரூபாய்.2 ஆயிரம் லஞ்சம் - நில அளவையர் கைது!
சேலம் மாவட்டம் சங்ககிரியில் வீட்டுமனையை அளவீடு செய்ய லாரி உரிமையாளரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற நில அளவையரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கஸ்தூரிபட்டியை சேர்ந்தவர் கணேசன். லாரி உரிமையாளர். இவர் தனது வீட்டுமனையை அளவீடு செய்யக்கோரி, சங்ககிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அப்போது, அங்கு நில அளவையராக பணிபுரியும் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் பகுதியை சேர்ந்த வைத்தீஸ்குமார்(வயது 40) என்பவர், வீட்டுமனையை அளவீடு செய்ய ரூபாய்.2 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத கணேசன், இதுகுறித்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தனர்.
அங்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த ஆலோசனைப்படி கணேசன் நேற்று பின்லாந்தின் இரசாயனம் தடவிய ரூபாய்.2 ஆயிரத்தை அரசு சாட்சி முன்னிலையில், நில அளவையர் வைத்தீஸ்குமாரிடம் வழங்கினார். அப்போது அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அவரை கையுடன் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையிலடைத்தனர். அடுத்ததாக:-ரூபாய் .5000 லஞ்சம் கூட்டுறவு சங்க ஊழியருக்கு 3 ஆண்டு சிறை
ஈரோடு மாவட்டம் பாண்டியம்பாளையம் அடுத்த புதுகுமாரபாளையம் சம்பத்குமார் (வயது 34). விவசாயி. இவர் அவரது மனைவி மகேஸ்வரி பெயரில், பயிர்க்கடன் பெறுவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டில் பாண்டியம்பாளையம் நல்லாம்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் விண்ணப்பித்தார். இந்தச் சங்கத்தில் ஊழியராக (கிளார்க்) இருந்த ரமேஷ் (வயது 50), அவரிடம் பயிர்க்கடனுக்கு பரிந்துரைக்க ரூபாய்.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு ஈரோடு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த நிலுவையில் நீதிபதி சரவணன் விசாரித்து, ரமேசுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய்.10 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார்
கருத்துகள்