இந்திய வம்சாவளி வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க் நகரில் உரையாற்றப் போன இடத்தில் கத்திக்குத்து.
படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கும் படுகிறது. ஒரு கண் பார்வையை இழக்கும் அபாயத்தில் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், அவரின் கல்லீரல் தாக்குதல் காரணமாக மீக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளதாகவும், இந்த தாக்குதல் காரணமாக அவர் பார்வை பறிபோகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது வென்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்திய ஹைதி மாஸ்டர் என்பவனைக் கைது செய்து காவல்துறை விசாரணையில் வைத்துள்ளனர். பிரபலமான எழுத்தாளராகிய, சல்மான் ருஷ்டி எழுதிய," சாத்தானின் வேதங்கள்' நூல், சர்வதேச அளவில், பெருய சர்ச்சையை ஏற்படுத்தியதில், இஸ்லாமிய மதத்தின் எதிரான விஷயங்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி, அவருக்கெதிராக, கடும் போராட்டங்களும் நடந்தன.பயங்கரவாதிகளின் மிரட்டலால், வெளிநாடுகளில் பதுங்கி வாழ்ந்த, பிரபல ஆங்கில எழுத்தாளர், சல்மான் ருஷ்டி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் , நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்ற வந்திருந்தார். அப்போது மேடையில் நின்றிருந்த சல்மான் ருஷ்டியை நோக்கி வந்த மர்மநபர் திடீரென கூர்மையான ஆயுதம் அல்லது கத்தியால் சல்மான் ருஷ்டி கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமைடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். பத்துப் பதினைந்து இடங்களில் காயம் ஏற்பட்டது
தாக்கிய நபரை அங்கிருந்த பாதுகாவலர்கள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். படுகாயமடைந்த அவரை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தாக்கிய நபர் ஹைதி மாஸ்டர் குறித்தும் விசாரணை நடக்கிறது. அவரைக் கொலை செய்ய பரிசுத் தொகை எல்லாம் அறிவிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக அவர் தற்போது தலைமறைவாகவும் பிரிட்டன் அரசின் காவல்துறையின் பாதுகாப்பின் கீழ் வாழ்ந்து வந்தார். இரான் நாடு, பிரிட்டன் உடனான தன் உறவை முறித்துக் கொண்டது. 1989 ஆம் ஆண்டு இரானின் அதி உயர் தலைவர் ஆயத்துல்லா காமினேனி, சல்மான் ருஷ்டிக்கு எதிராக ஃபத்வா வெளியிட்டார்.
கருத்துகள்