உட்பிரிவு பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய ரூபாய்.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை சர்வேயர் கைது .
மதுரையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூபாய்.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை தெற்கு தாலுகா அலுவலக சர்வேயர் முத்துபாண்டி( வயது 52), தற்போது கைது செய்யப்பட்டார். மதுரை இஸ்மாயில்புரம் ரமேஷ் (வயது 52). தனது மனைவி பெயரில் இப்பகுதியில் 2007 ஆம் ஆண்டில் நிலம் வாங்கி வீடு கட்டினார். அந்த இடத்தில் வரி செலுத்த பட்டாவை மனைவி பெயருக்கு மாற்றுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்தார்.
ஜூலை மாதம் 8 ஆம் தேதியில் மதுரை தெற்கு வட்டம் சர்வேயர் முத்துபாண்டி என்பவர் நிலத்திற்கு வந்து உட்பிரிவு கள ஆய்வு செய்து முடித்த பிறகு ரூபாய்.7 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அதன் பின்னர் நேற்றுமுன்தினம் அலுவலகத்திற்கு ரமேைஷ வரவழைத்து லஞ்சம் கொடுத்தால் பட்டா பெயர் மாற்றித்தருவேன் என்றார். தரத் தயங்கியவரிடம் பேசி ரூபாய்.5 ஆயிரம் தந்தால் போதும் என இறுதியில் முத்துபாண்டி கூறினார். ஆனால் கொடுக்க விரும்பாத ரமேஷ் இதுகுறித்து மதுரை ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலனிடம் புகார் தெரிவித்தார். அதன் பின்னர் அவர்கள் ஆலோசனை படி
நேற்று மாலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள தெற்கு தாலுகா அலுவலகத்தில்
ரமேஷிடமிருந்து ரூபாய் .5 ஆயிரம் லஞ்சம் பெற்ற சர்வேயர் முத்துபாண்டியை லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர்கள் சூரியகலா, அம்புரோஸ் ஜெயராஜ், குமரகுரு, ரமேஷ்பிரபு ஆகியோர் கைது செய்தனர்.
கருத்துகள்