முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தினார்கள்
முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியின் பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்“ என்று குறிப்பிட்டுள்ளார்.ராஜீவ்காந்தியின்
வரலாற்றில் ஆண்களின் உலகம் என்று, இன்றுவரை உலகளவில், உறுதியோடு நம்பப்படுகிற அரசியலில், பெண்களு சாதிக்க முடியும் என்று நம்பியவர் முன்னால் பிரதமர் ராஜீவ்காந்தி.
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து சரித்திரம் நிகழ்த்தினார்
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு தான், எளிய பெண்களின் தலையெழுத்தை மாற்றி சரித்திரம் படைத்தது.
ஒரே ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் ஒரே நேரத்தில் 10 லட்சம் பெண்களை அரசியலில் அதிகாரப்படுத்திய வரலாற்று நாயகன் ராஜீவ்காந்தி.உலகில் முன்னெப்போதும் நடந்திராத சரித்திர சாதனை இது.
ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவை அரை நூற்றாண்டு காலம் முன்னோக்கி செலுத்திய நவீன இந்தியாவின் தந்தை. பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டுடன் கூடிய பஞ்சாயத்து ராஜ் சட்டம் மூலம் அரசியல் சுவடற்ற தலைமுறையை சேர்ந்த பத்துலட்சம் பெண்களை அதிகாரத்தில் அமர்த்திய அதிசயத்தை நிகழ்த்தியவர்.
தொலைத்தொடர்பு, தொழில்நுட்ப புரட்சியின் மூலம் உலக அரங்கில் இந்தியாவிற்கென்று தனித்த இடத்தையும்,மரியாதையும் உருவாக்கிய் தொலைநோக்காளர். அன்பும்,புன்னகையும்,அறிவும்,தொலை நோக்கும் அவர் அடையாளம். அவர் விடுச்சென்ற கனவின் கரம்பற்றி நடப்போம். வலிமையான இந்தியாவை உருவாக்க அடித்தளம் இன்று அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள்