இராணுவ மற்றும் ரயில்வே மருத்துவமனைகளில் புதிதாக ஆயுஷ் பிரிவு தொடக்கம்
சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் குவஹாத்தி ஆகிய 5 இடங்களில் உள்ள மண்டல ரயில்வே மருத்துவமனைகளில் ஆயுஷ் மருத்துவப் பிரிவை அறிமுகப்படுத்துவதற்காக மத்திய ஆயுஷ் அமைச்சகம், ரயில்வே அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதே போன்று ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்புக்கு உட்பட்ட 12 மருத்துவமனைகள் மற்றும் கண்டோன்மென்ட் வாரியங்களுக்கு உட்பட்ட 37 மருத்துவமனைகளில், ஆயுர்வேத புறநோயாளிகள் பிரிவை ஏற்படுத்த, ஆயுஷ் அமைச்சகம் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய ஏற்பாடுகள், கடந்த ஜூன் முதல் வாரத்திலிருந்து செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக மக்களவையில் மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்..
கருத்துகள்